News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

பழனி கோயில் நிலம் வாங்கியது யார்..? அமைச்சருக்கு எவ்வளவு கமிஷன்?

பழனி கோயில் நிலம் ஒரே நாளில் பத்திர பதிவு செய்யப்பட்டதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியிருப்பது எக்கச்சக்க சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த விஷயத்தில் நிலத்தை வாங்கியது யார்..? யாருக்கு பணம் போனது, அமைச்சருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது ஊழல் இல்லை தவறு என்று அமைச்சர் கடந்துபோவது ஆச்சர்யமான மாற்றம் நடந்த சம்பவம் பற்றி பேசும் எதிர்க் கட்சியினர், ‘’கொடைக்கானல் சார் பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டன் என்பவருக்கு பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பு […]

சபரிக்கு 19 காயங்கள், கொடூர மரணம்.  துஷ்டசக்தியா விஜய்..?

கைது செய்யப்பட்ட நேரத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், சிறையில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்படும் நிலையில்,  விஜய் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு கிராமத்தில், சிறிய அளவில் பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன், கடந்த ஜூலை 9ம் தேதி தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாகக் கூறி தென்தாமரைக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். அவர்  ஜூலை 13ம் தேதி  மாரடைப்பு […]

உரிமைத்தொகை 2,500 ரூபாய்க்கு ஒப்புதல்..? விஜய் அமைச்சரவைக் கூட்டம்

நேற்று சென்னை பெரம்பூர் தொகுதியில், இ-சேவை மையத்துடன் இணைந்த தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை விஜய் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், நியாயவிலைக் கடையில் ஆய்வு, மின்சாரப் பேருந்து பணிமனையில் ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரபரப்பைக் கிளப்பினார். இந்த நிலையில், விஜய் அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய […]

லயோலாவுக்கும் மணிக்கும் என்ன சம்பந்தம்..? பாடநூல் பதவி சர்ச்சை

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தவெகவைச் சேர்ந்த லயோலா மணி நியமனம் செய்யப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாநிதியால் உருவாக்கப்பட்ட இந்த வாரியத்தின் முதல் தலைவராக அவரே இருந்தார். அப்படிப்பட்ட பதவிக்கு லயோலா மணியா என்று கல்வியாளர்கள் அலறுகிறார்கள். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக ஏ.லயோலா மணியை அரசு நியமித்துள்ளது. அவரது பதவிக் காலம் 3 ஆண்டுகள். அவரது நியமனம் தொடர்பான […]

அருணுக்கு ஆசை காட்டி டிரான்ஸ்ஃபர்..? விஜய் சாணக்கியத்தனம்

திமுக ஆதரவாளர் என்று கருதப்பட்ட அருண் ஐபிஎஸ், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், திமுகவினர் என்று தெரிந்தும் நியமித்து, அவரிடம் இருந்து சில முக்கிய தகவல்களை கறந்துவிட்டு, துறை மாற்றம் செய்துவிட்டதாக விஜய் ஆதரவாளர்கள் குதூகலிக்கிறார்கள். அருண் நியமிக்கப்பட்டதும் அரசு அலுவலகங்களில் ரெய்டு, லஞ்சப்பணம் பறிமுதல், அதிகாரிகள் மீது வழக்கு என அதிரடியாக செயல்பட்டார். விஜய் அறிவுரையின் படி அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பாக பத்திர […]

விஜயபாஸ்கர் குதிரைபேர வாக்குமூலம். ஆளுநரிம் மீண்டும் திமுக புகார்

அதிமுக எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் மூலம் கடத்தி ஆட்சி நடத்திவருகிறார் என்று ஆளுநரிடம் முன்னரே திமுக புகார் கொடுத்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் சிக்கலாக மாறியிருக்கிறது. சமீபத்தில் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேசியபோது, “விஜய் கட்சியில் இருந்து வந்து அணுகினார்கள்; பிடித்திருந்தது. இணைந்துவிட்டோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு தவெகதான் வம்படியாக ஆள் பிடிக்கிற வேலை செய்கிறது என்பதைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார். அதிமுகவைத் தூர்ந்துபோன சக்தி என மேடையில் […]

வந்தேமாதரத்தை எதிர்ப்பாரா விஜய்..? பாஜக உள்ளே வந்துவிட்டது.

மதச்சார்பு கொண்ட பாடலான வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதை ஆளும் பாஜக அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இதற்கு திமுக தொடங்கி அத்தனை எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவிக்கும் நிலையில், விஜய் மட்டும் வாயை மூடிக்கொண்டு இருப்பதைக் கண்டால், பாஜக செயல்திட்டத்தை அவர் நிறைவேற்றுவதாகவே கருத வேண்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திருமாவளவன், ‘’வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட வேண்டுமென்று இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் […]

பாஜகவை உடைப்பாரா அண்ணாமலை…? யாருடைய செலவு இது..?

பொள்ளாச்சியில் அண்ணாமலை நடத்திய மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்துகொண்டனர் என்று ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது. அதோடு, அடுத்த சில மாதங்களில் பாஜகவில் இருந்து முக்கியத் தலைவர்கள் அண்ணாமலையிடம் ஐக்கியமாவார்கள் என்று சொல்லப்படுகிறது. சொந்த செலவுக்கே நண்பர்களிடம் கையேந்தும் நிலையில் இருக்கும் அண்ணாமலைக்கு யார் செலவு செய்தது என்பது கேள்வியாகியுள்ளது. நேற்றைய கூட்டத்தில் அண்ணாமலை, ‘’நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் […]

விஜய்யை எதிர்ப்பாரா அண்ணாமலை…? பொள்ளாச்சியில் லீடர்ஸ்

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலையின் வி த லீடர்ஸ்  அமைப்பின் முதல் மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் விஜய்க்கு எதிராக அண்ணாமலை குரல் கொடுப்பாரா என்பது கேள்வியாக நிற்கிறது. பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி ‘WE THE LEADERS’ எனும் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்த அமைப்பின் முதல் மாநாடு போதையில்லாத தமிழகம் என்னும் தலைப்பில் […]

ஜெ. வீட்டில் குடியேறும் விஜய்… ரஜினியுடன் நேரடி மோதல்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்குவதற்கு முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதன் மூலம் அதிமுகவினரின் ஆதரவு கிடைப்பதுடன் ரஜினிக்கும் டென்ஷன் கொடுக்க முடியும் என்பதால் வேலைகள் தீவிரமடைவதாக சொல்லப்படுகிறது. தற்போது முதலமைச்சர் விஜய் தினசரி நீலாங்கரையில் இருந்து தலைமை செயலகம் வந்து செல்வதற்கு அதிக நேர்ம் பிடிக்கிறது.  வாரத்தில் 5 நாட்கள் என தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து மெரினாவில் உள்ள ராஜாஜி சாலையில் அமைந்துள்ள தலைமை செயலகம் வரை காரில் வந்து […]