Share via:
அதிமுக எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் மூலம் கடத்தி ஆட்சி நடத்திவருகிறார் என்று ஆளுநரிடம் முன்னரே திமுக புகார் கொடுத்திருந்தது. இந்நிலையில், சமீபத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் சிக்கலாக மாறியிருக்கிறது.
சமீபத்தில் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேசியபோது, “விஜய் கட்சியில் இருந்து வந்து அணுகினார்கள்; பிடித்திருந்தது. இணைந்துவிட்டோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இதன் மூலம் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு தவெகதான் வம்படியாக ஆள் பிடிக்கிற வேலை செய்கிறது என்பதைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார்.
அதிமுகவைத் தூர்ந்துபோன சக்தி என மேடையில் விமர்சனம் செய்துவிட்டு, அதிமுகவிலிருந்து சட்டமன்ற உறுப்பினரை இழுப்பது உறுதியாகியுள்ளது. ஆகவே இன்று ஆளுநரிடம் குதிரை பேரம் தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக வழக்கறிஞர்கள் மருது கணேஷ், கவி கணேசன் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து அர்லேக்கரிடம் புகார் மனு அளித்தனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சால் குதிரை பேரம் உறுதியாகியுள்ளது. ஆகவே, இந்த விஷயம் விஸ்வரூபம் எடுக்கும், விஜய்யை சிக்கலில் மாட்டிவைக்கிறது என்கிறார்கள்.