News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

கைது செய்யப்பட்ட நேரத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், சிறையில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்படும் நிலையில்,  விஜய் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு கிராமத்தில், சிறிய அளவில் பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன், கடந்த ஜூலை 9ம் தேதி தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாகக் கூறி தென்தாமரைக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர்  ஜூலை 13ம் தேதி  மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகச் சிறைத்துறை காவலர்கள் அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். இது திட்டமிட்ட காவல்நிலையப் படுகொலை எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்நிலையில் சபரிவர்மனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வெளியாகியுள்ளன.

 அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான ரத்தக் காயங்கள் இருந்துள்ளன. வலது கையில் 6 இடங்களிலும், வலது மற்றும் இடது கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் நெஞ்சுப்பகுதியில் கடுமையான காயமும், பின்னங்கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன; முகம் முழுவதும் சிவந்து போயிருந்தது. இதைப் பார்க்கும்போது மிகக் கொடுமையான சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டு சபரிவர்மன் கொல்லப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இது சிறையில் நடந்த மரணமாக இருந்தாலும், இதற்குச் சிறைக்காவலர்கள் மட்டுமே பொறுப்பல்ல. இது திட்டமிட்ட காவல் படுகொலை. சாத்தான்குளம் ஜெயராஜ்பென்னிக்ஸ், திருப்புவனம் அஜித்குமார் ஆகியோருக்கு என்ன நடந்ததோ, அதுதான் தற்போது சபரிவர்மனுக்கும் நடந்துள்ளது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை.

கடந்த ஆட்சியில் நடந்த காவல்நிலைய மரணங்களைக் கண்டித்து, “சாரி (Sorry) வேண்டாம், நீதி வேண்டும்என்று அறிக்கை விட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இந்தப் பச்சைப்படுகொலைக்கு இதுவரை வாய் திறக்கவில்லை. ஸ்டைலாக நடந்து காட்டினாலே போதும் என்று வாய் மூடி மெளனமாக இருக்கிறார்.

 தூய சக்தி அதற்குள் துஷ்ட சக்தியாக மாறிவருகிறதா..? வாயைத் திறங்க சி.எம்.சார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link