News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

பொள்ளாச்சியில் அண்ணாமலை நடத்திய மாநாட்டில் 15 லட்சம் பேர் கலந்துகொண்டனர் என்று ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது. அதோடு, அடுத்த சில மாதங்களில் பாஜகவில் இருந்து முக்கியத் தலைவர்கள் அண்ணாமலையிடம் ஐக்கியமாவார்கள் என்று சொல்லப்படுகிறது. சொந்த செலவுக்கே நண்பர்களிடம் கையேந்தும் நிலையில் இருக்கும் அண்ணாமலைக்கு யார் செலவு செய்தது என்பது கேள்வியாகியுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் அண்ணாமலை, ‘’நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு.

ஆகஸ்ட் மாதம், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்” ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்..

தவெக அரசில் இருப்பவர்கள் 10, 15, 20 வருடம் எம்.எல்.ஏவாக இருந்தவர்கள் அல்ல. தட்டு தடுமாறி வந்தவர்கள். அண்ணன் செங்கோட்டையனை தவிர அனைவரும் முதல்முறை அமைச்சர்கள்; கொஞ்சம் தடுமாறத்தான் செய்வார்கள். நல்ல சமுதாயமாக இருந்தால் தடுமாறும்போது தூக்கிச் பிடிக்க வேண்டுமே தவிர அழுத்திவிடக் கூடாது’’ என்று பேசினார்.

அண்ணாமலை ஆதரவாளர்கள் இந்த கூட்டத்தில் 15 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என்று சிலிர்க்கிறார்கள். அதேநேரம் அண்ணாமலை ஆதரவு பத்திரிகையாளர்கள் 2 லட்சம் பேர் கூடியதாகச் சொல்கிறார்கள். ஆனால் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்கள் மண்டபத்தில் 15 ஆயிரம் பேருக்கு சேர் போடப்பட்டது. வெளியே 10 ஆயிரம் பேர் நின்றார்கள். எனவே, கூட்டம் 25 ஆயிரம் பேரைத் தாண்டவில்லை.

இந்த லட்சணத்தில், “தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுபோல, 2031லும் மாற்றம் ஏற்படும்” என்பது வழக்கம்போல் அண்ணாமலையின் வெற்று அறிவிப்புதான். அண்ணாமலை தமிழக பாஜகவில் உடைப்பை ஏற்படுத்துவார், நிறைய தலைவர்கள் இன்று வருவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், யாரும் இணையவில்லை. இனியும் யாரும் இணைய மாட்டார்கள் என்பதே உண்மை. இந்த மாநாட்டுக்கு யார் செலவழித்தது என்பதை பார்த்தாலே பாஜகவின் உண்மை முகம் புரிந்துவிடும்’’ என்கிறார்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link