Share via:
பழனி கோயில் நிலம் ஒரே நாளில் பத்திர பதிவு செய்யப்பட்டதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியிருப்பது
எக்கச்சக்க சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த விஷயத்தில் நிலத்தை வாங்கியது யார்..? யாருக்கு
பணம் போனது, அமைச்சருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இது ஊழல் இல்லை தவறு என்று அமைச்சர் கடந்துபோவது ஆச்சர்யமான மாற்றம்
நடந்த சம்பவம் பற்றி பேசும் எதிர்க் கட்சியினர், ‘’கொடைக்கானல் சார் பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டன் என்பவருக்கு பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் ஒரே ஒரு நாள் மட்டும் பழனி சார் பதிவாளர் பணியில் இருந்து, பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.
அவரைஒரு நாள்மட்டும் பழனி சார் பதிவாளராக பணிபுரிய உத்தரவிட்டது யார் என்று விசாரித்தால் உண்மை தெரியவரும்..!
பழநி
அடிவாரத்துல இருக்கிற தண்டபானி மடத்துக்கு சொந்தமானது அந்த நிலம்… கடந்த திமுக ஆட்சியல அந்த நிலத்த யாருக்கும் பதிவு செய்யக் கூடாது என்று மாவட்ட பதிவாளர் அலுவலகங்களுக்கு பல முறை கடிதங்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. அதன் மூலம் முறைகேடான பதிவுகள் தடுக்கப்பட்டிருக்கிறது.
திமுக
ஆட்சியில இருக்கும் போது அதாவது 2026 மார்ச் மாதம் 27ஆம் தேதி அந்த நிலத்தை பதிவு செய்ய முயற்சி நடந்தது ஆனா அது தோல்வி அடைந்தது. கடந்த மார்ச் மாசம் பதிவு பண்ண முடியாத 100 கோடி மதிப்பிலான நிலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த மூன்றே மாசத்துல வெறும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி எப்படி பதிவு செய்ய முடிஞ்சது? 100 கோடி மதிப்பு இருக்கிற அதுவும் ஒரு மடத்துக்கு சொந்தமான நிலத்தை பதிவு செய்யும் போது அது அந்த துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தி இருப்பார்கள். அமைச்சருக்குத் தெரியப்படுத்தவில்லையா
அல்லது கமிஷன் வாங்கிக்கொண்டு அமைதியாகிவிட்டீர்களா..?’’ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
நிலம் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது, கோவில் நிலத்துக்கு காசு வாங்கியது யார்? எந்த வங்கிக்கணக்கில் பணம் போடப்பட்டது? இப்போ அந்தப்பணம் எங்க இருக்கிறது என்பதை எல்லாம் பார்த்தாலே
உண்மை தெரிந்துவிடும்.
ஆனால், பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி
உயர்வு கொடுத்துள்ளார் ரமேஷ். அதாவது 100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த
ஆளுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு
அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் மாரிமுத்துவை சென்னைக்கு நகர்த்த என்ன அவசியம்?’’
என்று கேள்வி கேட்கிறார்கள்.
ஆனால், இதை திசை திருப்பும் வகையில் உத்தமர் வேடம் போடுகிறது விஜய்
அரசு. அதாவது, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் உதவி எண் 94981 80936 அறிமுகம்
செய்து தலைமைச் செயலாளர் சாய் குமார் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.
பக்கா தில்லுமுல்லு பகிரங்கமாக நடந்துள்ளது. முதல்வர் விஜய் மிக்சர்
சாப்பிடுகிறாரா..?