News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை விலைக்கு வாங்குவதற்கு முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதன் மூலம் அதிமுகவினரின் ஆதரவு கிடைப்பதுடன் ரஜினிக்கும் டென்ஷன் கொடுக்க முடியும் என்பதால் வேலைகள் தீவிரமடைவதாக சொல்லப்படுகிறது.

தற்போது முதலமைச்சர் விஜய் தினசரி நீலாங்கரையில் இருந்து தலைமை செயலகம் வந்து செல்வதற்கு அதிக நேர்ம் பிடிக்கிறது.  வாரத்தில் 5 நாட்கள் என தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து மெரினாவில் உள்ள ராஜாஜி சாலையில் அமைந்துள்ள தலைமை செயலகம் வரை காரில் வந்து செல்கிறார். அரசு ஊழியரை போல காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அலுவலகத்தில் நேரம் செலவிடுகிறார்.

எனவே நீலாங்கரை டூ தலைமை செயலகம் வரை முதலமைச்சர் விஜய்யின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வதற்காக தினசரி காலையும், மாலையும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. இது பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்வோரை பெரிதும் சிரமத்தில் ஆழ்த்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதுமட்டுமின்றி ஏராளமான போக்குவரத்து காவலர்கள் 17 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்களும், பொதுமக்களும் இடையூறு ஏற்படுத்தாதவாறு பார்த்து கொள்கின்றனர்.

எனவே, தலைமை செயலகத்திற்கு அருகில் உள்ள பகுதியில் முதலமைச்சர் விஜய் தனது இல்லத்தை மாற்றி கொள்ள முடிவெடுத்தார். பசுமை வழிச் சாலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் காலி செய்த வீடுகளில் ஏதாவது ஒன்றில் குடியேற வாய்ப்பிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை வாங்குவதற்கு விஜய் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. தற்போது தீபாவும் அவரது சகோதரரும் கடன் சிக்கலில் இருக்கிறார்கள். அதனால் 350 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு வீட்டின் தற்போதைய உரிமையாளரும், ஜெயலலிதாவின் அண்ணன் மகளுமான தீபாவிடம் பேசி வருவதாக கூறுகின்றனர்.

இந்த டீலிங் கைகூடும் பட்சத்தில் சிட்டிக்குள் முதலமைச்சர் விஜய் குடியேறி விடுவார். அதன்பிறகு பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலில் சிக்க தேவையில்லை. தேவையற்ற விமர்சனங்களையும் தவிர்க்கலாம். பொதுமக்களும் ஈசிஆர் சாலையில் நெருக்கடியின்றி விரைந்து பயணிக்கலாம்.

போயஸ் கார்டன் ஏற்கனவே விவிஐபி ஏரியாவாக காணப்படுகிறது. சசிகலா, நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய் இடையில் உரசல் போக்கு நீடித்து வருகிறது.

முன்பு ஜெயலலிதாவுடன் ரஜினிக்கு செக்யூரிட்டியால்தான் உரசல் ஏற்பட்டது. அதேபோன்ற உரசல் போயஸ் கார்டனில் முதல்வர் விஜய் குடியேறினால் மீண்டும் எழவும் வாய்ப்பிருக்கிறது. அதற்காகவே விஜய் திட்டமிடுகிறார் என்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link