கனிமவளத்துக்கு தடை… கட்டுமானப்பொருட்கள் விலை குறையுமா?

எம் சாண்ட் உள்ளிட்ட கனிமங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்க சுரங்கம் மற்றும் புவியியல் துறை இயக்குநருக்கு விஜய் அரசு அதிகாரம் வழங்கி இருப்பது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான அத்தியாவசிய கனிமப் பொருள்கள் தங்கு தடையின்றி, போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்று செயல்படும் கருங்கல் மற்றும் கல்குவாரிகள் சுமார் […]
கரூரில் விஜய்க்கு நினைவுச்சின்னம்..? இறங்கியடிக்கும் திமுக, அதிமுக

கரூர் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசிய சம்பவம் செம வைரலாகியுள்ளது. இந்த விவகாரத்தை திமுக திருப்பியடிக்கத் தொடங்கியிருக்கிறது. ‘பயந்து ஓடிய விஜய்யின் முதுகுதான் கரூரின் நினைவுச்சின்னம்’ என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். ’’தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்” என்று செந்தில் பாலாஜி சாட்டையால் அடித்திருக்கிறார். திமுகவினர், ’வரலாற்றின் பக்கங்களில் நீங்கா இடம் பெற்ற 41 உயிர்களை […]
கரூர் சம்பவத்தில் போலீஸ் மீது விஜய் நடவடிக்கை..? வேட்பாளர் யாருங்க?

உள்துறையை பொறுப்பில் வைத்து இருக்கும் முதலமைச்சர் விஜய், தனக்கு கீழே பணியாற்றும் காவல் அதிகாரிகள் தான் 41 பேர் சாவுகளுக்கு காரணம் என்று பொதுவெளியில் குற்றம் சாட்டியிருக்கும் சம்பவம் அதிர வைத்துள்ளது. இது உண்மை என்றால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பேசும் திமுகவினர், ‘’கரூர் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அரசின் தலைவராக உள்ள முதல்வர் விஜய், ’போலீஸ் அலர்ட் செய்யவில்லை” என சொல்லி இருப்பது […]
லஞ்சம் கேட்டா கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க.. – கரூரில் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரம்

’’லஞ்சம் கேட்டா கொடுக்க முடியாதுன்னு சொல்லுங்க,..’’ – கரூரில் விஜய் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஆட்சியமைத்த 60 நாட்கள் கழித்து கரூர் பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் விஜய் வழக்கம் போல் இன்றும் ஸ்டாலினுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதோடு லஞ்சம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். இன்று பேசிய விஜய், ‘’மக்களை சந்திக்கணும், மக்கள் பிரச்சினைகளை எடுத்துப் பேசணும், அதுக்காகத்தான் நம்ம மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்கி திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் அப்படின்னு […]
அமைச்சர் ஆகிறார் ஜான் ஆரோக்கியசாமி..? திருச்சி கிழக்கு ரெடி

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நடிகர் விஜய், திருச்சி கிழக்கை ராஜினாமா செய்துவிட்டார். தவெகவின் தேர்தல் வெற்றிக்குத் திரைமறைவில் இருந்து மிக முக்கிய வியூகங்களை வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியை திருச்சி கிழக்கு தொகுதியில் நிறுத்தி அமைச்சராக்க விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரு தனியார் நபர்கள் தவெகவின் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பதாகக் கூறி திமுக மற்றும் பாஜக […]
கரூருக்கு கருப்பு உடையில் விஜய்… முக்கிய அறிவிப்பு என்ன..?

ஆட்சிக்கு வந்து 60 நாட்களுக்குப் பிறகு இன்று கரூர் செல்கிறார் முதல்வர். இந்த பயணத்தை விஜய்யால் மறக்கவே முடியாது. ஏனென்றால் தேர்தலுக்கு முன்பு நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் மரணம் அடைந்தனர். அவர் கண் முன்னே தூக்கிச்செல்லப்படும் அவலத்தைப் பார்த்தும் விஜய் கண்டுகொள்ளவில்லை. மரணம் பற்றிய செய்தி வந்ததும் சென்னைக்குப் பறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உத்தரவு அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்காக ஏற்கனவே […]
காவிரி போச்சு, ஏர்போர்ட் போச்சு. விஜய்க்கு தண்ணி காட்டும் கர்நாடகா

மேகதாது அணை கட்டுவதில் மும்முரம் காட்டிவரும் கர்நாடக அரசு இப்போது, காவிரி நீரை திறந்துவிடும்படி தமிழக அரசு கேட்கவில்லை என்று அதிரடி கிளப்பியிருக்கிறது. அதோடு, கர்நாடக அரசு இப்போது ஓசூருக்கு அருகில் பிரமாண்டமான விமானநிலையம் அமைக்கும் திட்டத்தில் இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காவிரி நீர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘’கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும், ‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ […]
திருமாவுக்கு நோபல் பரிசு…? இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் வைகோ

விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாலும், இன்னமும் திமுக உறவை முறித்துக்கொள்ளாமல் அவ்வப்போது ஜால்ரா போட்டுவருகிறார் திருமாவளவன். திருமாவின் இந்த இரட்டை வேடத்துக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று கிண்டல் செய்திருக்கிறார் வைகோ. கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் இல்லாத ஆட்சியை விஜய் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த ஆட்சி 6 மாதம்கூட நீடிக்காது என சாபம் விட்டார்கள். இப்போது அந்த 6 மாதம் கூட பொறுக்க முடியாமல், ஆளுநரிடம் சென்று 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி […]
குதிரை ரேட் என்ன..? விஜய்யிடம் ஆளுநர் கேள்வி…?

குதிரை பேரம் பற்றி முதல்வர் விஜய்யிடம் கேள்வி கேட்க ஆளுநர் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசுக்கு எதிராக, அதிமுக, திமுக மற்றும் பாஜக ஆகியன குதிரை பேரம், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை புகாராகத் தெரிவித்தன. ஆளுநரை நேரில் சந்தித்து அதிமுகவினர் கொடுத்த மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களைப் பல்வேறு ஆசை வார்த்தைகள், நிதி பரிமாற்றங்கள் […]
பொய் சொல்லக்கூடாது அமைச்சரே… கீர்த்தனாவுடன் மல்லுக்கட்டு

அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மேற்கொண்ட ஆய்வும் அதற்கு அவர் கொடுத்த விளக்கமும் வில்லங்க வைரலாகிவருகிறது. விருதுநகர் பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப, பள்ளி மாணவி பதில் அளிக்க தயங்கியதால், ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை மேம்படுத்த அறிவுறுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, “அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்” என்று ஒரு […]

