News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலையின் வி த லீடர்ஸ்  அமைப்பின் முதல் மாநாடு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் விஜய்க்கு எதிராக அண்ணாமலை குரல் கொடுப்பாரா என்பது கேள்வியாக நிற்கிறது.

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி ‘WE THE LEADERS’ எனும் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.

இந்த அமைப்பின் முதல் மாநாடு போதையில்லாத தமிழகம் என்னும் தலைப்பில் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக 15 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் அண்ணாமலை அரசியல் பேச மாட்டார் என்று ஒரு தரப்பும், விஜய்க்கு எதிராக கடுமையான விமர்சனம் வைப்பார் என்று ஒரு தரப்பும் சொல்கிறது.

குறிப்பாக கரூர் நெரிசல் விபத்தில் விஜய்யை குற்றவாளியாக அண்ணாமலை ஆதாரத்துடன் பேசுவார் என்கிறார்கள். பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link