Share via:
மதச்சார்பு கொண்ட பாடலான வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில்
பாடுவதை ஆளும் பாஜக அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இதற்கு திமுக தொடங்கி அத்தனை எதிர்க்கட்சிகளும்
கடும் கண்டனம் தெரிவிக்கும் நிலையில், விஜய் மட்டும் வாயை மூடிக்கொண்டு இருப்பதைக்
கண்டால், பாஜக செயல்திட்டத்தை அவர் நிறைவேற்றுவதாகவே கருத வேண்டியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து திருமாவளவன், ‘’வந்தே மாதரம் பாடலை அரசு
நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட வேண்டுமென்று இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம்
மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ‘வந்தே மாதரம்’ பாடலைக்
கட்டாயம் பாட வேண்டும் என்பதைத் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள் ஒன்றிய அரசிடம் உரிய முறையில் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் மட்டும் அதனைப் பாடினால் போதும்
என்று தொடக்கத்தில் சொன்னார்கள். இப்போதோ ‘தேசிய கீதம்’ பாடுவதற்கு முன்பு ‘தேசிய பாடலென்று’
“வந்தே மாதர”த்தைப் பாட வேண்டும் என ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது
எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
‘ஜன கண மன’ பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, ‘வந்தே மாதரம்’ பாடவேண்டும்
எனக் கூறப்பட்டது. ஆனால், ரவீந்திரந்தா தாகூர் எழுதிய ‘ஜன கண மன’ என்னும் பாடலே தேசியகீதம்
என முடிவு செய்யப்பட்டது. வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டதிலிருந்து
அதனை தேசிய கீதமாக அறிவித்துவிட வேண்டும் என பாஜக அரசு துடிக்கிறது. அதற்காகவே பல முயற்சிகளை
மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த சுற்றறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.
வந்தேமாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளுக்குப் பிறகு இந்துக்
கடவுள்களைப்பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதனை முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதங்களைச்
சார்ந்தோர் பாடினால் அது அவர்களது வழிபாட்டுக் கொள்கைக்கு எதிராகப் போய்விடும்…’’ என்று
எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
விஜய் ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா..? இதற்கும் ஸ்டாலினே காரணம்
என்று குற்றம் சொல்வாரா..?