Share via:
பாட்டிலுக்குப் பத்து ரூபாய் என்று கடந்த ஆட்சியில் திமுகவை கிண்டல்
செய்த விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தின் டிக்கெட் விலை 800 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்துப் பேசும் திமுகவினர், ‘’விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன்
நாளை ரிலீஸாகவிருக்கும் நிலையில் டிக்கெட் முன்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தமிழகத்தில்
அரசு நிர்ணயித்த விலையை விட ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்பனை செய்யவே கூடாது என்று தியேட்டர்
உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள்.
ஆனால், தியேட்டரிலேயே 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையிலும் விற்பனை
செய்யப்படுகிறது.. முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு 1500 ரூபாய் வரை வாங்குகிறார்கள்.
படம் தயாரிப்பு நிறுவனமே கூடுதல் வைத்து விற்க சொன்னதாக தியேட்டர்காரர்கள்
குற்றம் சாட்டுகிறார்கல். இதற்கு முன்னால் விஜய் ரசிகர்கள் தியேட்டர்காரர்களிடம் குறைந்த
விலைக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு அவர்கள் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வார்கள்.
ஆனால், இப்போது தியேட்டரிலேயே கொள்ளை அடிக்கப்படுகிறது.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை
செய்யப்படுகிறது என்றால், கூடுதல் பணம் எல்லாம் விஜய் பைக்குப் போகிறதா..? டாஸ்மாக்கில்
பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று கிண்டல் செய்த விஜய் அரசு நிர்ணயித்த கட்டணம் வாங்குவதற்கு
கட்டுப்பாடு போட முடியுமா?’’ என்று சவால் விடுகிறார்கள்.
அதோடு ஆன்லைனில் டிக்கெட்டுகள் இருப்பது போல காண்பித்தாலும் ஒரு
டிக்கெட் கூட எடுக்க முடிவதில்லை. தியேட்டருக்கு நேரில் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே
கள்ள மார்க்கெட்டில் 800 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள் என்கிறார்கள்.
விஜய் நாளைக்கு என்ன செய்யப்போகிறாரோ..?
