ஃபாரின் சரக்கு, ரெஸ்டோ பார்…. விஜய் சூப்பர் மாற்றம்

டாஸ்மாக்கில் 54 புத்தம் புதிய சரக்குகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் உணவுடன் கூடிய ரெஸ்டோ பார் திறக்கும் புத்தம் புதிய மாற்றத்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன. மாற்றம், மாற்றம் என்று சொன்னது இதைத்தானா என்று கொதிக்கிறார்கள். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ‘ரெஸ்டோ பார்’ எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதித்து வருவாயை […]
மேகாலயா பிராஜெக்ட்…? பத்திரிகையாளர் விஜயனை மிரட்டும் விஜய்

Meghalaya project…? Vijay threatens journalist Vijayan.
பழனி 100 கோடி மோசடிக்கு சிபிஐ விசாரணை..? ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்

பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை மாநில சிபிசிஐடி விசாரிப்பது நியாயமான பதிலைத் தராது, இதில் நேர்மையான விசாரணை நடைபெற சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்புக்குரல் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பழனி முருகன் கோவிலுக்கு […]
ரீல்ஸ் அலப்பறைக்கு விஜய் தடை..? 40 நிமிடத்தில் முடிந்த அமைச்சரவைக் கூட்டம்

பள்ளிகளில் உள்ளே சென்று ரிலீஸ் எடுக்கிறேன் என்று அலப்பறை செய்யக்கூடாது, துறைகளில் ஊழல் முறைகேடுகள் இருக்கக் கூடாது, ஊழல் முறைகேடுகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் விஜய் தலைமயில் நடைபெற்ற இரண்டாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை செய்திருக்கிறார். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ‘’ஊழல் புகாரில் சிக்கினால் உடனடியாக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். […]
விஜய் ஆட்சியில் பந்தாட்டம். நியமனம், டிரான்ஸ்ஃபர் பட்டியல்

நேற்றைய ஒரு நாள் மட்டும் தமிழக அரசு நிர்வாகத்தில் எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முதலில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமாரின் பணிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்புக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இந்த வகையில் சாய்குமார் 2027 பிப்ரவரி 28ஆம் தேதி வரை பதவியில் இருப்பார். அதேபோன்று, 35 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக அனுபவம் கொண்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே. பனீந்திர ரெட்டி தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். […]
அம்பேத்கர் இங்கே… திருமாவளவன் எங்கே..?

சேலம் மாவட்டம்,கெங்கவல்லி பகுதியில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தபிறகும், காவல்துறை அதை நிராகரித்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, எட்டுக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டவர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு செல்போனில் ஆறுதல் கூறிவிட்டு காணாமல் போய்விட்டார் திருமா என்று விசிகவில் புகைச்சல். சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் கிராமம் ஆதிதிராவிடர் நத்தம் புல எண்.374/1-க்குட்பட்ட நிலத்தில் பீடத்துடன் 20 ஆதி உயரத்தில் அம்பேத்கார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிம்மாசனம் போன்ற இருக்கையில் கால் மேல் கால் […]
காமராஜருக்கு விஜய் மரியாதை… சிபிஎஸ்சி மும்மொழிக் கொள்கை அராஜகம்

இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது புகைப்படத்துக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தியிருக்கிறார். அதோடு அவர் காமராஜர் குறித்து, ‘’தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன். கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் […]
பழனி கோயில் நிலம் வாங்கியது யார்..? அமைச்சருக்கு எவ்வளவு கமிஷன்?

பழனி கோயில் நிலம் ஒரே நாளில் பத்திர பதிவு செய்யப்பட்டதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியிருப்பது எக்கச்சக்க சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த விஷயத்தில் நிலத்தை வாங்கியது யார்..? யாருக்கு பணம் போனது, அமைச்சருக்கு கமிஷன் கொடுக்கப்பட்டதா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது ஊழல் இல்லை தவறு என்று அமைச்சர் கடந்துபோவது ஆச்சர்யமான மாற்றம் நடந்த சம்பவம் பற்றி பேசும் எதிர்க் கட்சியினர், ‘’கொடைக்கானல் சார் பதிவாளரான ஜஸ்டின் மணிகண்டன் என்பவருக்கு பழனி சார்பதிவாளர் அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பு […]
சபரிக்கு 19 காயங்கள், கொடூர மரணம். துஷ்டசக்தியா விஜய்..?

கைது செய்யப்பட்ட நேரத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், சிறையில் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்படும் நிலையில், விஜய் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு கிராமத்தில், சிறிய அளவில் பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளியான சபரிவர்மன், கடந்த ஜூலை 9ம் தேதி தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாகக் கூறி தென்தாமரைக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜூலை 13ம் தேதி மாரடைப்பு […]
உரிமைத்தொகை 2,500 ரூபாய்க்கு ஒப்புதல்..? விஜய் அமைச்சரவைக் கூட்டம்

நேற்று சென்னை பெரம்பூர் தொகுதியில், இ-சேவை மையத்துடன் இணைந்த தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை விஜய் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், நியாயவிலைக் கடையில் ஆய்வு, மின்சாரப் பேருந்து பணிமனையில் ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரபரப்பைக் கிளப்பினார். இந்த நிலையில், விஜய் அரசின் முதல் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய […]

