News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அனிதா ராதாகிருஷ்ணன் அவசர கைது… விஜய் பழி வாங்கல் ஆரம்பம்..?

முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் ஜூன் 20, 2026 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், தான் கைது செய்யப்படலாம் என்று கருதிய முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் […]

கரூர் மரணத்தில் ஸ்டாலின் கைது..? ஆதவ் அர்ஜூனா வில்லங்க குற்றச்சாட்டு

கரூரில் திமுக காவல்துறையை பயன்படுத்தி மக்களை கொலை செய்ததாக வெளிப்படையாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியிருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியலை உருவாக்கியிருக்கிறது. இதில் எப்படி ஸ்டாலினை கைது செய்யமுடியும் என்று கேள்வி எழுப்பினால், இந்த ஆட்சியில் எதுவும் நடக்கும் என்கிறார்கள். நேற்றைய தினம் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ‘’காவல்துறை மூலம் கரூரில் 41 பேரை திமுக கொலை செய்தீங்களே அதை நாங்க விட மாட்டோம்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பொதுமக்கள் அனைவரும் […]

ஆளுநர் பேச்சுக்கு விஜய் கப்சிப்… உதயநிதி உரிமைக்குரல்

வைகை நதியை மீட்கும் பொறுப்பை யாரும் முன்னெடுக்கவில்லை என்றால் ஆளுநர் மாளிகை பணிகளை மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பேசியிருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது. மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பேசியபோது, “நான் நிகழ்ச்சிக்கு வரும்போது, என் உதவியாளர் வைகை ஆற்றை காண்பித்தார். ஆறு இருக்கிறது. ஆனால், நீர் எங்கே என ஆச்சரியப்பட்டேன். ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும். எனவே இதற்கு […]

தூய சக்தியாக மாறிய விஜயபாஸ்கர்கள். வாஷிங்மெசின் விஜய் ஆப்சென்ட்

“மக்கள் பணத்தை தொடமாட்டேன். தொட்டா விடமாட்டேன். தொட்டவங்களையும் விடமாட்டேன்” என்று வீரவசனம் பேசிய விஜய் இன்று ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் இரண்டு விஜயபாஸ்கர்களையும் த.வெ.கவில் இணைத்துக்கொண்டார். சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜயபாஸ்கர் இருந்த பொழுது மாதா மாதம் எம்.டி.எம். குட்காவிடம் 14 லட்சம் லஞ்சம் ரூபாய் பார்ட்டி ஃபண்ட் வாங்கினார் என்று சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை […]

செந்தில்பாலாஜிக்கு ஸ்கெட்ச். விஜய்க்கு திமுக சிபிஐ விசாரணை?

விஜய் கரூருக்குச் செல்வதற்குள் செந்தில்பாலாஜியை சிறையில் பிடித்து அடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு தவெக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி நேரடியாகவே விஜய் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். தவெக கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ, சட்டப்பேரவைத் தலைவர் தேர்வின் போது மாற்றி வாக்களித்தால் 35 கோடி தருவதாக ஒருவர் பேரம் பேசினார் என்றும், மிரட்டினார் என்றும் கடந்த 29ம் தேதி புகார் அளிக்கப்பட்டு அதன் மீது வழக்கு பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரை சேர்ந்த […]

விஜய் கூட்டணியில் புதிய கட்சிகள்…? கோவளத்தில் தவெக புது ரூட்

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் கோவளத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைக்கூட்டத்தில், மேலும் இரண்டு புதிய கட்சிகள் ஆதரவு தெரிவிக்க இருப்பதாக அறிவிப்பு செய்தது, தலைவர்களை திகிலடைய வைத்துள்ளது. விஜய் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் பெறவில்லை. ஆகவே காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், சென்னையை அடுத்த கோவளத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் […]

தரங்கம்பாடியில் ஆணவப் படுகொலை..? திருமா, ரஞ்சித் அமைதி ஏன்..?

தரங்கம்பாடி வட்டம் சாத்தங்குடி கிராம பட்டியலினத்தை சேர்ந்த பார்த்திபன் என்கிற இளைஞர் வேறு சாதி பெண்ணான திவ்யதர்ஷினியை காதலித்துவந்த நிலையில்,  சாதிவெறி கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. போலீஸில் புகார் கொடுத்தபிறகும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால்,  பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் ஒரு தோப்பில் கூரைக்கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இத்தனை நாட்களும் ஆணவப் படுகொலைக்கு சட்டமியற்ற வேண்டும் என்று போராடிய திருமாவளவன் இப்போது ஆட்சியிலே பங்கெடுத்து இருக்கிறார். எனவே, உடனடியாக ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றுவதற்கு நெருக்கடி […]

உதயநிதியுடன் மல்லுக்கட்டுவதற்கு வைகோ…? சட்டசபை ஆஃபர்

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிகவை விட, வைகோவே அதிகமாக திமுக மீது விமர்சனம் செய்துவருகிறார். அதனால், அவரை இடைத்தேர்தலில் நிறுத்தி உதயநிதிக்கு போட்டியாக சட்டசபையில் மோத வைப்பதற்கு விஜய் பிளான் செய்வதாக சொல்லப்படுகிறது. செய்தியாளர் சந்திப்பில் வைகோ, ‘’கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில் இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம்’’ என்றார். இதுகுறித்து பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’கூட்டணி தர்மம் என்பதற்காக திமுகவின் ஊழல், கட்டிங், கமிஷனை பொறுத்துக்கொண்டோம் என்பது […]

விஜய்யுடன் இரண்டு விஜயபாஸ்கர் இணைப்பு விழா… வேலுமணிக்கு எப்போது..?

அதிமுக முன்னாள் எம்எல்ஏவான விராலிமலை விஜயபாஸ்கரும், கரூர் விஜயபாஸ்கரும் நாளை முதல்வர் விஜய் முன்னிலையில் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மட்டுமின்றி புதுக்கோட்டை தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் ஐக்கியமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இணைப்பு விழாவுக்கு முன்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட பேரணியை சென்னையில் நடத்த சி.விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளார். 200 பேருந்துகள், 600 […]

போதை அமைச்சர் மாற்றம் இல்லை..? ஆளுநர் சந்திப்பு புஸ்

போதைக்கு எதிராக மரத்தான் ஓடிய தமிழக முதலமைச்சர் விஜய் நேற்றைஇய தினமே அமைச்சரை மாற்றப் போகிறார் என்று பேச்சு நிலவியது. விஜய்ன்னா சும்மாவா, அநியாயத்தை சகிச்சுக்கவே மாட்டார் என்று போஸ்ட் போட்டவர்கள் அனைவரும் அமைச்சர் மாற்றப்படவில்லை என்றதும் கப்சிப் நிலைக்குப் போயிருக்கிறார்கள். தவெகவினர் இதுகுறித்து, ‘’போதைக்கு எதிராக அரசாங்கம் இருக்கும் என்று கூறிவிட்டு போதை பயன்படுத்துவரை அரசாங்கத்தில் வைத்திருந்தால் அது நல்லதல்ல.  இப்போது அமைச்சரின் இரண்டாவது வீடியோவும் வெளியாகியுள்ளது. அதோடு அமைச்சர் மீது, ‘’போதை பொருள் பயன்படுத்துவது […]