News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

கரூரில் திமுக காவல்துறையை பயன்படுத்தி மக்களை கொலை செய்ததாக வெளிப்படையாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியிருப்பது மிகப்பெரும் அதிர்ச்சியலை உருவாக்கியிருக்கிறது. இதில் எப்படி ஸ்டாலினை கைது செய்யமுடியும் என்று கேள்வி எழுப்பினால், இந்த ஆட்சியில் எதுவும் நடக்கும் என்கிறார்கள்.

நேற்றைய தினம் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், ‘’காவல்துறை மூலம் கரூரில் 41 பேரை திமுக கொலை செய்தீங்களே அதை நாங்க விட மாட்டோம்’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பொதுமக்கள் அனைவரும் லைவ்வாக பார்த்தார்கள்.  விஜய் தாமதமாக வந்த காரணத்தால் 11 குழந்தைகள் மற்றும் 16 பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது ஆட்சியில் இருந்த திமுக விஜய் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. அதேபோல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடப்பாடி பழனிசாமி நேரடியாக விஜய்க்கு ஆதாவு கொடுத்தார். அந்த நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டார் விஜய்.

இந்த நிலையில், தங்கள் மீது உள்ள பழியை போலீஸ் மீது போட்டு போலீஸை கொலை குற்றவாளியாக்கி பொய் பிரச்சாரம் செய்து உள்ளார். ஆதவ் அர்ஜூனா. அப்போது காவல்துறையைக் கையில் வைத்திருந்த ஸ்டாலின் மீது குற்றம் சுமத்துகிறார். இந்த விஷயத்தில் ஸ்டாலினை விசாரணைக்கு அழைத்து கைது செய்தால் ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் அவரை குற்றவாளியாகக் காட்டிவிடலாம் என்று தவெக நினைக்கிறது.

இப்போது கரூர் வழக்கு விசாரணை  உச்ச நீதி மன்றம் அமைத்த முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான, சிறப்பு புலனாய்வுக் குழுவின் கையில் உள்ளது.

கரூர் சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகியும், வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில் ஸ்டாலின் மீது ஆதவ் நேரடியாக குற்றம் சுமத்துவது, ஏதோ ஒரு மிகப்பெரிய சம்பவத்துக்கான நேரேடிவ் என்று சொல்லப்படுகிறது.  ஆகவே, எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

ஸ்டாலின் குற்றவாளி என்று விஜய் ரசிகர்களை நம்ப வைத்திருக்கிறார்கள். அதை உறுதிப்படுத்திவிட்டால், எதிர்க்கட்சி என்ன சொன்னாலும் எடுபடாது என்பதே ஆதவ் திட்டம் என்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link