News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

விஜய் கரூருக்குச் செல்வதற்குள் செந்தில்பாலாஜியை சிறையில் பிடித்து அடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு தவெக செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் ரகுபதி நேரடியாகவே விஜய் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

தவெக கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ, சட்டப்பேரவைத் தலைவர் தேர்வின் போது மாற்றி வாக்களித்தால் 35 கோடி தருவதாக ஒருவர் பேரம் பேசினார் என்றும், மிரட்டினார் என்றும் கடந்த 29ம் தேதி புகார் அளிக்கப்பட்டு அதன் மீது வழக்கு பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கை சிக்க வைக்க முயற்சி செய்வதாக திமுகவினர் கொதிக்கிறார்கள்.

இதுகுறித்து திமுகவினர், ‘’ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்றால் எத்தனை எம்.எல்.ஏ.க்களை வளைக்கவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் திமுகவினர் வேலை செய்வார்களா..? ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வந்த போது அதிமுக எம்எல்ஏக்களை வாங்காத முக ஸ்டாலின் இப்போது செய்வாரா..? ஆகவே, இது திட்டமிட்டு செந்தில்பாலாஜியை கைது செய்வதற்கான நடவடிக்கை.

இந்த வழக்கு பதிவு செய்யும் போதே அது லஞ்ச ஒழிப்பு வழக்கு என காவல்துறையை சார்ந்த ஆணையர், துணை ஆணையர், ஆய்வாளர்  என அனைவருக்கும் தெரிந்துள்ளது. ஆனால், அந்த நடைமுறைகளை பின்பற்றாமல் தவிர்க்க திருவல்லிக்கேணி காவல் நிலையம் மூலம் புகார் பெறப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ க்கு பணம் கொடுக்க முயற்சித்ததாக கூறி இவ்வளவு விரைவாக செயல்படும் காவல்துறை, அதிமுக எம்.எல்.ஏ கள் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சட்டமன்றத்திலேயே தவெக கட்சியில் இணைகிறார்களே அதை பார்த்தும் காவல்துறையும், லஞ்ச ஒழிப்பு துறையும் ஏன் அமைதியாக இருக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வார்த்தையும் நீதிபதி முன்பு வைத்துள்ளோம்.

அதேபோல் தவெக செய்யும் குதிரை பேரத்தை மதிமுக தலைவர் வைகோ அவர்களே வெளிப்படையாக கூறி உள்ளார். குற்றத்தை தடுக்கும் லஞ்ச ஒழிப்பு துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எங்களது வாதங்களை வைத்துள்ளோம்.  

முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட வைகோ வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.எ.ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து ஜோசப் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோ அவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் என்று கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று திமுக போராட உள்ளது’’ என்கிறார்கள்.

எப்படியோ போதை அமைச்சர் விவகாரத்தை மக்கள் மறந்துவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link