Share via:
வைகை நதியை மீட்கும் பொறுப்பை யாரும் முன்னெடுக்கவில்லை என்றால்
ஆளுநர் மாளிகை பணிகளை மேற்கொள்ளும் என்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத்
ஆர்லேகர் பேசியிருப்பது சர்ச்சையாக மாறியிருக்கிறது.
மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு ஆளுநர்
ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பேசியபோது, “நான் நிகழ்ச்சிக்கு வரும்போது, என் உதவியாளர்
வைகை ஆற்றை காண்பித்தார். ஆறு இருக்கிறது. ஆனால், நீர் எங்கே என ஆச்சரியப்பட்டேன்.
ஆறு என்றால் அதில் நீர் இருக்க வேண்டும். எனவே இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நான்
அவரிடம் சொன்னேன். மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் இதனை இலக்காக மாற்றி அதற்காக முயற்சி
செய்ய வேண்டும். யாராவது இதற்கு முயற்சி எடுக்க வேண்டும். யாரும் முயற்சி எடுக்கவில்லை
என்றால் ஆளுநர் மாளிகை முயற்சி எடுக்கும்” என்று பேசினார்.
இதற்கு விஜய் அல்லது அவரது அமைச்சர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, ‘’’ஆளுநர், தான் நியமன பதவியில் – அதுவும்
கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு
நடத்தி இருக்கிறார். அரசியலமைப்புக்கும் – மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட
ஆளுநருக்கும், இதை அனுமதித்த விஜய் அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது,
வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார்.
ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
திமுக ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல்,
ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்…’’
என்று எதிர்ப்புக்குரல் விடுத்துள்ளார்.
இப்படி ஆளுநருக்கு எதிராகப் போராடி எனர்ஜியை வேஸ்ட் செய்யாமல்
ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக உருப்படியாக எதையாவது செய்யுங்கள் உதய்.