Share via:
மறுவாழ்வு முகாமில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு
தமிழக முதல்வர் விஜய் திறந்துவைத்திருக்கும் வீடுகள் மற்றும் பணிக்கொடை மிகுந்த வரவேற்பு
பெற்றுள்ளது.
இன்று தலைமைச் செயலகத்தில், பொது மற்றும்
மறுவாழ்வுத் துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு
முகாமில் 8 கோடியே 52 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 1 கோடியே
37 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ள
148 புதிய வீடுகளை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
மேலும், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த
56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு
உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடை வழங்கும் நிகழ்வையும் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலன் காத்திடும்
வகையில் தமிழ்நாடு அரசால் மாதாந்திரப் பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித்தொகை
ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதோடு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு
மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குச் சமுதாய முதலீட்டு
நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவையும்
வழங்கப்பட்டு வருகின்றன.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலனைக்
கருத்திற்கொண்டு. முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் மாதாந்திரப்
பணக்கொடையை, குடும்பத் தலைவருக்கு ரூ.1,500லிருந்து ரூ.1,800ஆகவும், குடும்ப உறுப்பினர்களாகவுள்ள
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ.1,000லிருந்து ரூ.1,200ஆகவும்.
12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500லிருந்து ரூ.600ஆகவும் உயர்த்தப்பட்ட மாதாந்திரப்
பணக்கொடையை ஆண்டொன்றுக்கு 14 கோடியே 95 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவினத்தில்,
19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில்
தொடங்கி வைத்தார்.
இலங்கைத் தமிழர்கள் மீது விஜய் தனி அக்கறை
செலுத்தியது மக்களிடம் பாராட்டு பெற்றுள்ளது.

