Share via:
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்,
விசிகவை விட, வைகோவே அதிகமாக திமுக மீது விமர்சனம் செய்துவருகிறார். அதனால், அவரை இடைத்தேர்தலில்
நிறுத்தி உதயநிதிக்கு போட்டியாக சட்டசபையில் மோத வைப்பதற்கு விஜய் பிளான் செய்வதாக
சொல்லப்படுகிறது.
செய்தியாளர் சந்திப்பில் வைகோ, ‘’கூட்டணி தர்மம் என்பதற்காக கூட்டணியில்
இருக்கும்போது தவறுகளை பொறுத்து கொண்டோம் இப்போது அதை சொல்கிறோம்’’ என்றார்.
இதுகுறித்து பேசும் அரசியல் ஆர்வலர்கள், ‘’கூட்டணி தர்மம் என்பதற்காக
திமுகவின் ஊழல், கட்டிங், கமிஷனை பொறுத்துக்கொண்டோம் என்பது மக்களுக்கான தர்மம் ஆகுமா?
நேற்றைய கூட்டணி பற்றி இன்றுதான் சொல்லமுடியும் என்றால் இன்றைய கூட்டணி பற்றி நாளைக்குத்தான்
சொல்வீர்களா..? நேர்மையான அரசியல் என்பது சார்ந்துள்ள கூட்டணி நலனை முன்னிறுத்துவதா
? அல்லது தன்னை நம்பி சேர்ந்த மக்களின் நலனை முன்னிறுத்துவதா?’’ என்று விமர்சனம் வைக்கிறார்கள்.
ஆனால், வைகோவின் இந்த நேரடி அட்டாக்கை விஜய் ரொம்பவே ரசிக்கிறாராம்.
அதனால் உதயநிதிக்கு சரியான போட்டி கொடுக்க விஜய் ஆசைப்படுகிறார். இதற்காக வரும் சட்டமன்ற
இடைத்தேர்தலில் வைகோவை நிறுத்துவதற்கு விருப்பம் என்று தெரிவித்துள்ளார் விஜய்.
இதுவரை நாடாளுமன்றத்தில் மட்டுமே பேசிவந்த வைகோ, சட்டமன்றத் தேர்த்லுக்கு
சம்மதிப்பாரா..? உதயநிதியை தெறிக்கவிடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுகிறது. ஆனால், இந்த
ஆஃபர் வைகோவை குஷியாக்கியிருக்கிறதாம். வைகோவுக்கு பரபரப்பான ஒரு நேரம் தொடங்கியிருக்கிறது.