Share via:
அதிமுக முன்னாள் எம்எல்ஏவான விராலிமலை விஜயபாஸ்கரும், கரூர் விஜயபாஸ்கரும்
நாளை முதல்வர் விஜய் முன்னிலையில் இணைய இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து
பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விழாவில் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மட்டுமின்றி
புதுக்கோட்டை தெற்கு அதிமுக மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் மாவட்ட நிர்வாகிகள்
உள்ளிட்ட பலரும் ஐக்கியமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த இணைப்பு விழாவுக்கு முன்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட
பேரணியை சென்னையில் நடத்த சி.விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளார். 200 பேருந்துகள், 600
கார்களில் புதுக்கோட்டை மாவட்ட ஒட்டுமொத்த அதிமுகவினரையும் சென்னைக்கு அழைத்து வருகிறார்.
இந்த நேரத்தில் வேலுமணி ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோவைக்கு விஜய்யை வரவழைத்து பிரமாண்ட கூட்டம் ஏற்பாடு செய்து, சேர்வதற்கு முடிவெடுத்துள்ளாராம்.
சி.வி.சண்முகம் என்ன செய்வது என்று தீவிர ஆலோசனை செய்துவருகிறார்.
இடைத்தேர்தல் எண்ணிக்கை விரைவில் 12 என உயரும் என்கிறார்கள்.
இந்த நேரத்தில் அதிமுகவினர், ‘’எடப்பாடிக்கு கட்சி விரோத நடவடிக்கையில்
ஈடுபட்ட 25 பேரின் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கும் நல்ல வாய்ப்பு இருந்தது. அப்போதே
அவர்கள் பதவியைப் பறித்திருந்தால் இப்படி இவர்கள் ராஜினாமா செய்து தேர்தலில் நிற்க
முடியாமல் போயிருக்கும். நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார்’’ என்று குமுறுகிறார்கள்.