News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

போதைக்கு எதிராக மரத்தான் ஓடிய தமிழக முதலமைச்சர் விஜய் நேற்றைஇய தினமே அமைச்சரை மாற்றப் போகிறார் என்று பேச்சு நிலவியது. விஜய்ன்னா சும்மாவா, அநியாயத்தை சகிச்சுக்கவே மாட்டார் என்று போஸ்ட் போட்டவர்கள் அனைவரும் அமைச்சர் மாற்றப்படவில்லை என்றதும் கப்சிப் நிலைக்குப் போயிருக்கிறார்கள்.

தவெகவினர் இதுகுறித்து, ‘’போதைக்கு எதிராக அரசாங்கம் இருக்கும் என்று கூறிவிட்டு போதை பயன்படுத்துவரை அரசாங்கத்தில் வைத்திருந்தால் அது நல்லதல்ல.  இப்போது அமைச்சரின் இரண்டாவது வீடியோவும் வெளியாகியுள்ளது.

அதோடு அமைச்சர் மீது, ‘’போதை பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ.. குழந்தைக்கு தான் மாத்திரை என்றால் இன்ஸ்டா ஸ்டோரியாக எதற்கு வைக்க வேண்டும்..? நெருக்கமானவர்களுக்கு மட்டும் தெரியும் வகையில் இன்ஸ்டா ஸ்டோரியில் ஏன் பதிவிட வேண்டும்..?’’ என்று பெண் வழக்கறிஞர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ஆளுநருடன் சபாநாயகர், அமைச்சர் சந்திப்பு நிகழ்ந்ததும், அமைச்சர் மாற்றப்படுவார் என்று நினைத்தோம்.  ஆனால், இந்த சந்திப்பின் நோக்கம் வேறு என்கிறார்கள்.

தவெக அரசின் மீது எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்படும் ‘குதிரை பேரம்’ புகார்கள் குறித்தும், அதற்குரிய உண்மைத் தன்மைகள் குறித்தும் ஆளுநரிடம் பேரவைத் தலைவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை அவசரமாக ஏற்றதன் பின்னணியில் எழுந்த சட்ட ரீதியான சந்தேகங்களுக்கும், புகார்களுக்கும் இந்தச் சந்திப்பில் தெளிவுபடுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தவெக அரசு பதவியேற்ற பிறகு நடைபெற்ற கூட்டத்தொடரின் ஆளுநர் உரைக்கு முறைப்படி நன்றி தெரிவிப்பதும் இந்தச் சந்திப்பின் ஒரு முக்கிய நோக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதோடு, திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள். மக்களை அடுத்து விஜய் சந்திக்கும் முன்பு போதை அமைச்சரை நீக்குவதே சரியான தீர்வாக இருக்கும். இதை செஞ்சுடுங்க அண்ணா…’’ என்று கெஞ்சுகிறார்கள்.

விஜய் என்ன செய்யப்போகிறார்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link