News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

தரங்கம்பாடி வட்டம் சாத்தங்குடி கிராம பட்டியலினத்தை சேர்ந்த பார்த்திபன் என்கிற இளைஞர் வேறு சாதி பெண்ணான திவ்யதர்ஷினியை காதலித்துவந்த நிலையில்,  சாதிவெறி கும்பல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. போலீஸில் புகார் கொடுத்தபிறகும் நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால்,  பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் ஒரு தோப்பில் கூரைக்கொட்டகையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இத்தனை நாட்களும் ஆணவப் படுகொலைக்கு சட்டமியற்ற வேண்டும் என்று போராடிய திருமாவளவன் இப்போது ஆட்சியிலே பங்கெடுத்து இருக்கிறார். எனவே, உடனடியாக ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றுவதற்கு நெருக்கடி கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்துப் பேசுபவர்கள், ‘’பார்த்திபன் – திவ்யதர்ஷினி இறப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்ததாகவும், சம்பவத்திற்கு முன்பு பார்த்திபன் மீது பெண்ணின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

மேலும், பார்த்திபன் உடலில் பலத்த காயங்கள் இருந்ததாக கூறப்படுவதால், இந்த மரணத்தில் உண்மை என்ன என்பது முழுமையாக வெளிவர வேண்டும். தங்கள் எதிர்கால வாழ்க்கையை எத்தனையோ கனவுகளுடன் திட்டமிட்டிருக்கும் இந்த இளம் காதலர்களின் மரணம் பல கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை இது ஆணவப் படுகொலையாக இருந்தால், இரண்டு கேள்விகள்: 1. காதலர்களைக் கொலை செய்தால் காதல் நின்றுவிடுமா? 2. சமூகம் இயங்காமல் போய்விடுமா?

பார்த்திபன் – திவ்யதர்ஷினி மரணத்தில் உள்ள அனைத்து சந்தேகங்களுக்கும் தமிழக அரசு வெளிப்படையான, விரைவான விசாரணை நடத்த வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். போன ஆட்சியில் ஆளுங்கட்சியை கேள்வி கேட்டவர்கள், இன்று அதிகாரப்பூர்வமாக விஜய் அரசை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. உண்மை எதுவாக இருந்தாலும் அது வெளிச்சத்திற்கு வர வேண்டும். உயிரிழந்த இருவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

மகிழ்ச்சி நிறைந்த இந்த இளையவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நாம் பதறவில்லையெனில், நாம் மனிதராக வாழ இயலுமா? பார்த்தீபன்-திவ்யதர்சினி ஆகிய காதலர்கள் படுகொலையாகி உள்ளார்கள்… பார்த்தீபனின் உடலில் குருதி வழிந்திருக்கிறது என்கின்றனர். பெண்ணின் குடும்பத்தால் தாக்கப்பட்டார் பார்த்தீபன். சில மணிநேரத்தில் திவ்யதர்சினியும் தூக்கில் பார்த்திபனோடு தொங்குகிறார் என்றால் இது தற்கொலையா? காவல்துறை தற்கொலை எனச் சொல்வதாக தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒருவேளை தற்கொலையெனில் தூண்டியது யார் என அறிவது காவல்துறை வேலையில்லையா? காயத்துடன் இருக்கும் பார்த்தீபன் கொலை செய்யப்படவில்லையென சொல்ல முடியுமா? சொந்த மகளை, மகனை படுகொலை செய்யும் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குகிறது சாதி. இந்த சாதியை குடி என்கிறது போலித்தமிழ்த்தேசியக் கூட்டம். சாதி சொன்னால் தான் தமிழனா இல்லையா என்பேன் என்கிற இந்த போலிகள், தற்போது வாய்மூடி கள்ளமெளனத்தோடு கடந்து செல்வார்கள். இந்தக் கொலைகளையும் தெலுங்கு சதி என எழுதி வைப்பார்கள். இவர்களுக்குள்இருக்ககும் சாதிவெறிதான், மனச்சிதைவு நோயாக ஆணவபப்டுகொலையாக வெளியாகிறது.’’ என்று கண்டனம் தெரிவிக்கிறார்கள்.

திருமாவும் ப.ரஞ்சித்தும் களத்தில் குதிப்பார்களா..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link