8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவு. விஜய் அட்டகாச அறிவிப்பு

Breakfast for students up to Class 8: Vijay’s fantastic announcement.
விஜய் சொல்கிறார், கவர்னர் செய்கிறார். இதுதான் உண்மையான மாற்றம்

முந்தைய திமுக அரசு ஏராளமான மசோதாக்களை நிறைவேற்றி கவர்னர் மாளிகைக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து எந்த ஃபைலும் நகராது. அதை திமுகவினர் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். மசோதா நிறைவேற்றியதுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று அமைதியாகிவிடுவார்கள். ஆனால், இப்போது ஆட்சி மாறியதும் காட்சியும் மாறியிருக்கிறது. விஜய்யின் தவெக அரசு தனது முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றிய 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பது சரித்திர சாதனையாகப் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றிய […]
அன்பில் மகேஸ்க்கு சம்மன். உதயநிதிக்கு வலை..?

அன்பில் மகேஸ்க்கு சம்மன் அனுப்பப்பட்டதின் பின்னணியில் பல்வேறு மர்மக் கதைகள் உலா வருகின்றன. சோதனையின் அடிப்படையில் பல திருப்பங்களும் சிக்கல்களும் இருப்பதாகவும், இதில் உதயநிதி சிக்கவைக்கும் ஆதாரம் இருப்பதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி, நிரந்தர அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய […]
விஜய் சென்னை ரிடர்ன். வழியெங்கும் உற்சாக வரவேற்பு

ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து சென்ற முதல்வர் விஜய் இன்று காலை தாயகம் திரும்பினார். லண்டனிலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்திடும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது. இந்த பயணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’தமிழ்நாட்டை […]
மதுரையில் கோலாகல குடமுழுக்கு. விஜய்க்கு மக்கள் வாழ்த்து

17 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில், யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரை கலசங்களில் எடுத்து சென்று கோபுரங்கள் மீது ஊற்றினர் சிவாச்சாரியார்கள். ஒரே நேரத்தில் 12 கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு வாசல்களில் இருந்தும் தரிசனம் செய்தார்கள். இந்த நிலையில் விஜய்யின் வாழ்த்து செய்தி இந்துக்களுக்கு பெருமகிழ்ச்சி கொடுத்துள்ளது. விஜய்யின் வாழ்த்துச் செய்தியில், ‘’தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை […]
தாம்பரத்தில் டெண்டர் செட்டிங்… ஊழலுக்கு விஜய் சாட்டையடி

ஊழல் செய்ய மாட்டேன், ஊழல் செய்பவர்களை விடவும் மாட்டேன் என்று கூறிய முதல்வர் விஜய், தவறு செய்த அதிகாரி மீது எடுத்திருக்கும் நடவடிக்கை மக்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளது. இது குறித்து பேசும் சமூக ஆர்வலர்கள், ‘’தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு சிலைகளை அமைச்சர் சரத்குமார் திறந்து வைக்கிறார். இந்த இரண்டு சிலைகளுக்கும் போடப்பட்ட டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே சிலைகளுக்கு திறப்பு விழாவை நடத்தி முடித்து இருக்கிறார்கள். அதாவது டெண்டர் திறந்து இரண்டு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை […]
விஜய்க்கு லண்டனிலும் குவியும் ரசிகர்கள்… யுகே காணாத அதிசயம்

தமிழகத்தில் முதல்வர் விஜய் எந்த இடத்துக்குப் போனாலும், எக்கச்சக்க ரசிகர்களும் ரசிகைகளும் பின் தொடர்வதும் காத்திருப்பதும் இன்று வரையிலும் தொடர்கிறது. அதே போன்று லண்டனில் ரசிகர்கள் ஹோட்டலுக்கு முன்பே காத்திருப்பது, பிரிட்டன் காணாத அதிசயம் என்கிறார்கள். பிரிட்டிஷ் நாடான யு.கே.விற்கு உலகின் பல்வேறு பகுதியில் இருந்து நடிகர்கள், இசைக் கலைஞர்கள், அரசியல்வாதிகள் தினமும் வருகிறார்கள். ஆனாலும், இதுவரை யாருக்காகவும் நடுரோட்டில் மக்கள் கூடியதில்லை என்பது மிகப்பெரும் ஆச்சர்யமான செய்தியாக பார்க்கப்படுகிறது. லண்டன் நகரின் முக்கியமான மருத்துமனை, லண்டன் […]
அன்பில் மகேஸ்க்கு சுத்து போட்ட போலீஸ்… 100 கோடி ஊழல்

முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் மத்திய குற்றப்பிரிவு சோதனை செய்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வாங்கி தருவதாக கூறி பல கோடி பெற்று மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை மற்றும் திருச்சியில் அன்பில் மகேஷ்க்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடக்கிறது. திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு […]
2000 ரூபாய்க்கு மேல் கட்டணம்… பாஜக அரசு அடுத்த கொள்ளை

பொதுமக்கள் தலையில் வரி மேல் வரி போட்டு பத்தாண்டு காலமாக பாடாய்படுத்தும் பாஜக அரசு அடுத்த அதிரடியை இன்று நிகழ்த்தியிருக்கிறது. அதாவது, 2,000 ரூபாய் வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகள், ரூபே டெபிட் கார்டுகளுக்கு வங்கிகளோ, சேவை நிறுவனங்களோ எந்தவொரு கட்டணமும் விதிக்கக் கூடாது என மத்திய அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இப்போது எங்கேயும் எப்போடும் நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களிடமும் யுபிஐ பரிவர்த்தனை முக்கியப் பங்காற்றுகிறது. சின்னச்சின்ன […]
விஜய் சேதுபதிக்கு செருப்படி… கோபத்தில் கொதிக்கும் ரசிகர்கள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு சர்ச்சையான நிலையில், ‘’விஜய் தொலைக்காட்சியில் நிறுவனம் விஜய் சேதுபதியை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று செருப்பால் விஜய் சேதுபதியின் படத்தை அடித்து ரசிகர்கள் கோபத்தை வெளிக்காட்டி வருகிறார்கள். இந்த நிலையில், ’’இந்நிகழ்ச்சியில் நடப்பவை அதன் கதையோட்டத்தின் ஒரு பகுதியே தவிர, வெளியில் உள்ள எந்தவொரு தனிநபர், அமைப்பு, சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைக் குறிப்பது அல்ல’’ என்று விஜய் […]

