News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சு சர்ச்சையான நிலையில், ‘’விஜய் தொலைக்காட்சியில் நிறுவனம் விஜய் சேதுபதியை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும்’  என்று செருப்பால் விஜய் சேதுபதியின் படத்தை அடித்து ரசிகர்கள் கோபத்தை வெளிக்காட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், ’’இந்நிகழ்ச்சியில் நடப்பவை அதன் கதையோட்டத்தின் ஒரு பகுதியே தவிர, வெளியில் உள்ள எந்தவொரு தனிநபர், அமைப்பு, சித்தாந்தம் அல்லது சூழ்நிலையைக் குறிப்பது அல்ல’’ என்று விஜய் டிவி வெளிப்படையாக ஒரு விளக்கம் தெரிவித்துள்ளது. ஆனாலும், இதை விஜய் ரசிகர்கள் ஏற்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்த நடிகை ஆதிரையை வேண்டுமென்றே எழுந்திருக்க சொல்லி, முதல்வர் விஜய்யைத் திட்டுவது போன்று இழிவுபடுத்தி வாய்க்கொழுப்புடன் நடிகர் விஜய் சேதுபதி பேசியிருந்தார்.  எனவே, விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு விஜய் சேதுபதியை அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் அதுவரை செருப்பால் அடிப்பதை நிறுத்த மாட்டோம் என்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, ’’வாய்க்கொழுப்பு நடிகர் விஜய் சேதுபதி சேதுபதியை நிகழ்ச்சியை விட்டு நீக்கும் வரை மற்றும் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியை ஸ்பான்சர் Sponser செய்யும் 1.டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் 2.ஏசியன் பெயிண்ட்ஸ் 3. Surf Excel 4.ஜோஸ் ஆலுக்காஸ் Jos Alukkas 5.டிடிகே பிரெஸ்டிஜ் 6.கே ஏ ஜி டைல்ஸ் (KAG tiles) விஜய் சேதுபதியின் பினாமி நிறுவனம். 7. Eyetex Dazzler 8.Cadburys 5 ஸ்டார் 9.அணில் சேமியா 10.Continental Extra Coffee 11. Aroma Ghee விஜய் சேதுபதிக்கு சம்பளம் கொடுக்கும் மேற்கூறிய அனைத்து நிறுவனங்களின் பொருட்களை வாங்குவதை புறக்கணிப்போம்’’ என்று கூறியிருக்கிறார்கள்.

அதோடு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் உருவான கள்ளக்காதல், போதை மருந்து ஜாபருடன் உள்ள தொடர்பு என்று விஜய் சேதுபதியின் அத்தனை பூர்வீகத்தையும் தோண்டியெடுத்து திட்டுகிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் விஜய் சேதுபதி ஜெயிலுக்குப் போகும் நிலை உருவாகவும் வாய்ப்பு உண்டு என்றே தெரிகிறது.

வாயைக் கொடுத்து புண்ணாக்கிய கதைதான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link