News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கூவம் நதியை சீரமைப்பதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து கொள்ளை அடித்தார் என்பது வரலாறு. அதற்கடுத்து வந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஸ்டாலின் உள்ளிட்டோர்களும் கூவம் நதியை சீரமைக்கிறேன் என்று சொல்லி பணத்தை ஏப்பம் விட்டார்கள்.

இப்போது, உண்மையான விடிவுகாலம் விஜய் ஆட்சியில் வரப்போகிறது. ஆம், சென்னையின் முகத்தையே மாற்றுமளவுக்கு கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மேம்பாட்டுக்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.

சென்னையில் சுமார் 32 கி.மீ நீளம் கொண்ட கூவம் ஆறு, 42 கி.மீ நீளம் கொண்ட அடையாறு ஆறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவை ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலப்பால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2015 வெள்ளத்திற்கு பிறகு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், முழுமையான மாற்றம் வரவில்லை. தற்போது உலக வங்கி மற்றும் பிற நிதி நிறுவனங்கள் உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் உள்ள ஆறுகளை மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட சென்னை ரிவர்ஸ் டிரான்ஸ்ஃபார்மேஷன் கம்பெனி லிமிடெட். இந்த நிறுவனம் ஏற்கனவே கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் ஓட்டேரி நல்லா ஆகியவற்றை எப்படி மாற்றலாம் என்பதற்கான பிளான் தயாரித்துள்ளது.

அதன்படி முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பைலட் ஏரியாக்களில் எப்படி வேலை செய்வது, எவ்வளவு செலவாகும், என்ன தொழில்நுட்பம் தேவை, சுற்றுச்சூழல் பாதிப்பு என்ன என்பதை துல்லியமாக கூறும் டீட்டெய்ல்டு பிராஜெக்ட் ரிப்போர்ட் தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஆலோசனை மற்றும் டிபிஆர் தயாரிக்க மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து உருவாக்கிய சிறப்பு நிதியின் மூலம் 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அனைத்து தகுதியான நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.

இதன் மூலம் ஆற்றில் கலக்கும் 300-க்கும் மேற்பட்ட கழிவுநீர் குழாய்களை தடுத்து, சுத்திகரிப்பு நிலையத்திற்கு திருப்புதல், ஆற்றின் இருபுறமும் தடுப்புச் சுவர் மற்றும் நடைபாதை, படகு போக்குவரத்து சாத்தியக்கூறுகள், பல்லுயிர் பூங்காக்கள்  அமைத்தல், வெள்ள நீரை சேமிக்கும் வழிகள் ஆராயப்படும்.

விஜய் காலத்திலாவது கூவம் மாறட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link