News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

விஜய் கூட்டணி உறுதியாகிறதா..? எடப்பாடி முடிவு என்ன..?

பாஜகவை பாசிசம் என்று வர்ணித்த விஜய், இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையாலாமா என்பது குறித்து விவாதம் நடத்தத் தொடங்கியிருக்கிறார்.   கடந்த காலங்களில் அதிமுகவும், பாஜகவும் அழைத்தபோது மறுத்த விஜய், இப்போது தானாகவே முன்வந்து கூட்டணிக்கு வருவதற்கு முக்கிய காரணம், வேட்பாளர் தேர்வு குறித்த சிக்கல்கள் என்கிறார்கள். கட்சித் தலைமையின் நிபந்தனைப்படி, வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும், அதற்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும் என்பதால், மா.செக்கள் ஆட்களைத் திரட்ட முடியாமல் […]

எம்.ஜி.ஆர். பெயரில் சசிகலா புதிய கட்சி. ஜெயலலிதாவை மறந்துவிட்டாரா..?

தேர்தல் வருவதையொட்டி தினம் ஒரு கட்சி உருவாகிவருகிறது. சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், பெங்களூரு புகழேந்தி, ஆம்ஸ்ட்ராங் மனைவி ஆகியோர் கட்சி ஆரம்பித்தார்கள். அந்த வரிசையில் இன்று சசிகலாவும் தேர்தலுக்குப் புதிய கட்சியைத் தொடங்கிவிட்டார். ஏற்கெனவே சசிகலா வீட்டில் தினகரன், திவாகரன், சின்ன எம்.ஜி.ஆர். சுதாகரன் ஆகியோர் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இப்போது சசிகலா இன்று அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று ஒரு கட்சியைத் தொடங்கியிருக்கிறார். மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் […]

ரஜினியை விட விஜய்க்கு தைரியம் அதிகமா..? த்ரிஷாவுக்காக ஆதவ் பேச்சு

ரஜினியை திமுக மிரட்டி அரசியலுக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட்டது. ஆனால், விஜய்யை அப்படி செய்ய முடியாது. விஜய் யாருக்கும் பயப்பட மாட்டார் என்று ஆதவ் அர்ஜூனா பேசிய விவகாரத்தின் பின்னணியில் த்ரிஷா விவகாரம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேநேரம், விஜய் பேசியதன் அடிப்படையிலே ஆதவ் இப்படி பேசியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், ரஜினியை எல்லா வகையிலும் முந்திவிட்டதாக காட்டவேண்டும் என்கிற எண்ணம் விஜய்க்கு இருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் “லியோ” சினிமா விழாவில் வம்படியாக விஜய் “காட்டுல காக்கா கழுகு […]

மீண்டும் அதிமுகவில் இணைந்த காளியம்மாள். எந்த தொகுதி.. என்ன பதவி?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். விஜய் கட்சிக்குப் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘’2026 தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் மக்கள் நிறைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு முதல் சட்டம் ஒழுங்கு வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் ஏமாற்றப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். […]

வைகோவை சுருட்டிய ஸ்டாலின். திகிலில் திருமா

ஒரு காலத்தில் ஜெயலலிதா கட்சியில் 35 தொகுதிகள் வாங்கிய மதிமுக இன்று திமுகவில் 4 தொகுதிகள் வாங்கும் அளவுக்கு சுருங்கிவிட்டது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல், ‘’தி.மு.க கூட்டணியில் எங்களால் எந்த பிரச்சினையும் வராது. புதிய கட்சிகள் வரவால் கடந்த தேர்தலில் போட்டியிட தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது’’ துரை.வைகோ பேசியிருப்பதை அவர் கட்சியினரே எதிர்க்கிறார்கள். மதிமுகவின் வரலாறு சுவாரஸ்யமானது. திமுகவுக்கு மாற்றாக வைகோ விளங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால், 2006 […]

எல்லை மீறும் பாலியல் கொடூரம்… இன்று சென்னை, நேற்று விளாத்திகுளம், முன்தினம் மதுராந்தகம்..

தினமும் கொலை, கொள்ளை நடந்துகொண்டிருந்த தமிழகத்தில் இப்போது தினம் ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துவருகிறது. திருச்சியில் இருந்து சென்னைக்கு பிராஜெக்ட் செய்வதற்கு வந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது இன்று வெளியே வந்துள்ளது. கடந்த 9-ம் தேதி அந்த மாணவி கல்லூரியில் இருந்தபோது சிலர் அவரது  செல்போனுக்கு, அவரது படத்தை ஆபாசமாக  மார்பிங் செய்து அனுப்பியுள்ளனர். பின்னர் அந்த மாணவியை தொடர்புகொண்ட நபர், இதை மற்றவர்களுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டுமானால், தாங்கள் அழைக்கும் இடத்துக்கு தாங்கள் அனுப்பும் […]

விஜய்க்கு 60 சீட் உறுதி..? தவெக வித்தியாச கருத்துக்கணிப்பு

ஒவ்வொரு கட்சியினரும் லட்சக்கணக்கில் செலவு செய்து கருத்துக்கணிப்பு வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பு நடத்தியிருக்கிறார். அதில் 60 சீட் ஜெயித்து எதிர்க்கட்சித் தலைவராகிறார் என்பது உறுதி ஆகியிருக்கிறதாம். இது குறித்து பேசும் தவெக நிர்வாகி ஒருவர், ‘’கரூர் சம்பவத்திற்குப் பிறகு தவெக இமேஜ் அடிவாங்கிவிட்டது. அதுவும் த்ரிஷாவுடன் விஜய் வெளியே வந்ததும் ஒட்டுமொத்தமாக டேமேஜ் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் விஜய் தன்னால் எளிதாக ஜெயிக்க முடியும் என்று நம்புகிறார். அதற்குக் காரணம் […]

உறுதியாகும் ராமதாஸ், சசி கூட்டணி..? அதிர்ச்சியில் அதிமுக

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தோற்றுப்போன சசிகலாவும், பாமகவை கைப்பற்றும் முயற்சியில் தோற்றுப்போன ராமதாஸும் சந்தித்துப் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தை அதிரவைத்துள்ளது. ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார். அதன் அடையாளமாக, கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளன்று பசும்பொன்னில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு அதிமுக அல்லது பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்த்தார், ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதேபோல் திமுக கூட்டணியில் தனக்கு […]

சிலிண்டருக்குத் தட்டுப்பாடு… எகிறப்போகும் பெட்ரோல் விலை

எல்லோரும் கேஸ் சிலிண்டருக்கு மாறுங்கள் என்று கட்டாயப்படுத்தி சேர்த்து, மானியம் கொடுத்தனர். அதன்பிறகு மானியம் கட் செய்யப்பட்டது. இப்போது விட்டுக்கு வீடு கேஸ் இருக்கிறது. இந்த நிலையில் ஈரான் போர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் சிக்கல் தொடங்கிவிட்டது. இப்போது வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை. ஒரு சிலிண்டர் பதிவு செய்த 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டர் பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஹோட்டல்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய குழு அமைப்பு. சர்வதேச அளவில் நிலவும் அரசியல் […]

விஜய்க்கு பாஜக கேட்டை மூடியாச்சு… சீமானுடன் சேர்வாரா..?

எப்படியாவது விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்காக அவரை நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தர்ராஜன் தொடங்கி அத்தனை பாஜகவினரும் ஆர்வமாக அழைத்தார்கள். கொடி தெரியுது, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று எடப்பாடி பழனிசாமியும் தலை அசைத்தார். ஆனால், விஜய் விடாப்பிடியாக கூட்டணி வைத்தால் காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே வைப்பேன் என்று உறுதியாக நின்றார். ஆனால், அவரை காங்கிரஸ் ஏமாற்றிச் சென்று விட்டது. தனியே நின்றால் செல்லுபடியாகாது என்பது தெரிந்து இப்போது அடுத்தகட்டத் தலைவர்கள் மூலம் பாஜகவுக்கு […]