Share via:
இதுவரை காலை உணவுத் திட்டத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பயன்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இந்த திட்டத்தை 8ம் வகுப்பு மாணவர்கள் வரையிலும் விரிவாக்கம் செய்து
விஜய் தொடங்கிவைக்க இருப்பது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல்வர் விஜய் லண்டன் பயணத்தால் செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்கி
வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கம்
22ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளை உள்ளடக்கிய
செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இந்தத்
திட்டம் தொடங்கப்படுகிறது.
விருதுநகரில் தொடங்க இருப்பதாக இருந்த பள்ளி மாணவர்களுக்கான காலை
உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியை முதல்வர் விஜய் சென்னையில் சொந்தத் தொகுதியான பெரம்பூர்
அரசுப் பள்ளியில் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5,454 பள்ளிகளில், 6 முதல் 8 வரையிலான சுமார் 15 லட்சம் மாணவர்கள்
இத்திட்டம் மூலம் புதிதாக பயன்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால்
ஏற்கெனவே ஐந்தாம் வகுப்பு வரை கிட்டத்தட்ட 18 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளி மாணவர்களுக்கு நல்ல யோகம்தான்.

