News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து சென்ற முதல்வர் விஜய் இன்று காலை தாயகம் திரும்பினார். லண்டனிலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீட்டு மற்றும் தொழில் வளர்ச்சி மையமாக உயர்த்திடும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணமாக அமைந்துள்ளது.

இந்த பயணம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’தமிழ்நாட்டை உலகின் முன்னணி முதலீடு, வளர்ச்சி மையமாக உயர்த்தும் நோக்கில் முதல்வர் விஜய் லண்டன் பயணம் அமைந்தது. விஜய்யின் இங்கிலாந்து பயணம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, முதலீட்டு ஈர்ப்புக்கு மைல்கல்.

முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ரூ.15,300 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். நம்பிக்கைக்குரிய தொழில் முதலீட்டு மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும் வெளிநாட்டு பயணம் தொடரும். 2036க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த இலக்கு’ நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளடு.

இந்த முதலீடுகளில் அதிகபட்சமாக சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம், தனது பிரிட்டன் மற்றும் ஐரோப்பா கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாட்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதுதவிர, ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி, பிரிட்டனைச் சேர்ந்த வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய இங்கிலாந்து, ஐரோப்பா நிறுவனங்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்ததாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  சென்னை திரும்புவதற்கு விமான நிலையத்திலும், வழியெங்கும் மக்கள் காத்திருந்து அவருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். சாதனைகள் தொடரட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link