யார் கிறிஸ்டோபர் திலக்..? தேமுதிகவுக்கு இரண்டு…. தம்பிதுரைக்கு வில்லங்கம்

திமுக நேற்றைய தினம் அறிவித்த எம்.பி. பட்டியலில் கான்ஸ்டண்டைன் ரவீந்திரனை திமுக வேட்பாளராக அறிவித்தது. அவர் தேமுதிகவில் இருந்து வந்தவர் என்பதால், இந்த தேர்தலில் இரண்டு தேமுதிகவினருக்கு ராஜ்யசபா சீட்டா என்று பரம்பரை திமுகவினர் கொதிக்கிறார்கள். அதேபோல் காங்கிரஸ் எம்.பி.யாகும் கிறிஸ்டோபர் திலக் யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. திமுகவின் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ரவீந்திரன் இதற்கு முன்பு தேமுதிகவில் இருந்து பின்னர் திமுகவிற்கு வந்தவர். இவர் 2014 […]
விவசாயி கெட்டப்பில் விஜய்… சங்கீதாவை மறந்துட்டாரே தலைவர்.

சோழ மண்டலம் தஞ்சையில் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டார். சங்கீதா குற்றச்சாட்டுக்குப் பிறகு முதன்முதலாக மேடை ஏறுவதால் அதுகுறித்து ஏதேனும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியொரு விஷயம் நடந்ததாகவே விஜய் காட்டிக்கொள்ளவில்லை. வழக்கம்போல் இன்றும் அவரது வேனுக்குப் பின்னே கூட்டம் வழக்கம்போல் அலை மோதியது. ஏகப்பட்ட ரசிகர்கள் ஹெல்மட் போடாமல் பின் தொடர்ந்து வந்து கீழே விழுந்தார்கள். விஜய்யும் வழக்கம் போல் எதுவும் கண்டுகொள்ளாமலே போய்விட்டார். இன்றைய கூட்டத்தில் விஜய், ‘’காஞ்சிபுரத்தில வேலூர்ல நம்மளோட விஷன […]
பிரேமலதாவுக்கு ஒண்ணு. திமுகவுடன் காங்கிரஸ் பஞ்சாயத்து ஓவர்.

கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஸ்டாலின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிவிட்டது காங்கிரஸ் கட்சி. நேற்று வந்த பிரேமலதாவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டு எங்களுக்கும் ஒன்று கொடுப்பது என்ன நியாயம் என்று கொதிக்கிறார்கள். தேர்தல் பேச்சு தொடங்கியடும் காங்கிரஸ் 45 தொகுதிகளை கேட்டது. திமுக 22 தொகுதிகளில் நின்றது. வழக்கமாக இதுபோன்ற நேரங்களில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சட்டென சரண்டர் ஆகிவிடுவார்கள். கிரிஷ் சோடங்கர் அப்படி அடங்கவில்லை. மீண்டும் […]
அமித்ஷாவுடன் எடப்பாடி சந்திப்பு… கைதாகிறார் அமைச்சர் நேரு..?

பிரதமர் மோடி தமிழகம் வந்துசென்றதும் டெல்லிக்குப் போயிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவதாக சொல்லப்பட்டு வந்தாலும், உண்மையில் அமைச்சர் நேரு கைது தொடர்பாக அழுத்தம் கொடுக்கவே இந்த சந்திப்பு என்று சொல்லப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தயார் நிலை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அரசியல் கட்சிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் […]
ஸ்டாலின் மீண்டும் 2,000 ரூபாய் பரிசு… தேர்தல் ஓட்டாக மாறுமா..?

மகளிர் உரிமைத் தொகை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைத்த ஸ்டாலின் இப்போது விளிம்புநிலையில் இருப்போருக்கு 2 ஆயிரம் ரூபாய் அள்ளிக்கொடுத்திருக்கிறார். இதுகுறித்து இன்று ஸ்டாலின், ‘’கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் […]
ஸ்டாலின் மீது கோபத்தில் திமுக நிர்வாகிகள்… பன்னீருக்கு சீட் நஹி

சமீபத்தில் கட்சியில் சேர்ந்த பன்னீருக்கு ராஜ்யசபா வேண்டுமானால் கொடுக்கலாம், சட்டசபை சீட் தரவே வேண்டாம் என்று பழம்பெரும் திமுக தலைகள் எல்லாம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு தேர்தலில் சீட் வேண்டும். கட்சியில் பதவிகள் வேண்டும். வாரியங்கள், கூட்டுறவு சங்கங்களில் பொறுப்புகள் வேண்டும். தனக்கு வேண்டியவர்களுக்கு சலுகைகள் வேண்டும் என்றெல்லாம் கேட்டுத்தான் திமுகவுக்கு வருகிறார்கள். அப்படியென்றால் கட்சிக்காக பல காலமாக உழைப்பவர்களுக்கு எந்தவித அங்கீகாரமும் கிடையாதா? என்று அதிருப்தி குரல் எழுந்துள்ளது. இப்போது திமுக முக்கியப் புள்ளிகளில் பெரும்பாலோர் […]
இபிஎஸ் கையில் தொகுதிப் பட்டியல்… அமித்ஷாவுடன் ஃபைனல் டிஸ்கஷன்

பாரதப்பிரதமர் மோடியின் மதுரை விசிட் நடந்து முடிந்ததும் தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்பட்டது. மதுரை கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் இன்று டெல்லிக்குப் போகும் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசுகிறார். இன்றைய தினம் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து 4ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, மார்ச் 6ம் தேதி தொகுதிப் பட்டியல் […]
ஸ்டாலின் பிறந்த நாள் கிஃப்ட்… புதிய கட்சி வரவு

இன்று 73வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றன. அதேநேரம், இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்டிபிஐ திமுகவுக்கு வந்துள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கடந்த முறை 3 தொகுதிகளில் போட்டியிட்ட ஐயூஎம்எல் தற்போது தமிழ்நாட்டில் 2 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளது. அதே போன்று மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி […]
பன்னீர் துரோகத்துக்கு யார் காரணம்..? எடப்பாடிக்குச் சிக்கல்

மூன்று முறை அதிமுக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த விவகாரம் அதிமுகவினரிடம் கடும் புயலை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய்யிடம் போய் சேர்ந்திருக்கலாம், சசிகலாவிடம் போயிருக்கலாம் என்றெல்லாம் புலம்புகிறார்கள். இந்த நிலையில் கேசி பழனிசாமி, ‘’பன்னீர் எங்க வேணாலும் போய் இருக்கலாம், ஆனால் திமுகவுக்கு போனது ஏத்துக்கவே முடியாது. ஆனா, இதுக்கு ஓபிஎஸ் மேல மட்டும் தப்பு சொல்ல முடியுமா ?? கட்சியில் தலைமைக்கு போட்டியா இருக்கார்ன்னு இவங்க அவரை வெளிய அனுப்பி 5 வருஷம் ஆச்சு, அந்த […]
விஜய்க்கு சங்கீதா இல்லேன்னா த்ரிஷா… கிளப்பியது நயினாரா சபரீசனா..?

நீண்ட காலமாக சங்கீதாவிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார் விஜய். இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, விஜய் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கும் நேரத்தில் மட்டும் விவாகரத்து கேட்வது ஏன்? இதற்குப் பின்னே இருப்பது யார் என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன. சமீபத்தில் நயினார் நாகேந்திரன், ‘முதலில் த்ரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வரவேண்டும்’ என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையானது. இதற்கு த்ரிஷா பக்கமிருந்து எதிர்ப்பு வந்தது. இந்நிலையில் பாஜகவினர், ‘’நடிகர் விஜய் நல்ல அரசியல் தலைவராக […]

