News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திமுகவுக்கு இணையாக விஜய் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தது சீமானின் நாம் தமிழர் கட்சி. ஆனாலும், ஆட்சிக்கு வந்தபிறகு விஜய் அமைதியாகவே இருந்தார். ஆனாலும், நாளுக்கு நாள் விஜய் மீதான விமர்சனங்கள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் ரோடுஷோ வரும் பாதையில் பரப்புரை செய்தது என தகராறு செய்த கோவை கார்த்திகா கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது இடைத்தேர்தல் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கோவையில் கார்த்திகா மற்றும் அக்கட்சியினர் 6 பேரை தாராபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினர், ‘’தேர்தல் நேரத்தில் போட்ட வழக்கிற்கு இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் பொய்யான வழக்கில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் தகவல் தொழில் நுட்பப் பாசறை மாநில பொறுப்பாளர் முருகசந்தரகுமார் அவர்களையும் அதிகாலை வீடு புகுந்து கைது செய்து எப்படியாவது நாம் தமிழர் கட்சியை ஒடுக்க வேண்டுமென காவல்துறையை ஏவி விடும் விஜய்க்கு கடும் கண்டனங்கள்

தமிழ்நாடு அரசும் காவல்துறையும் இப் பழிவாங்கும் செயல்களில் இறங்கியிருப்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் கோர முகத்தை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, கொலைகளும், பாலியல் குற்றங்களும், போதை கடத்தல்களும் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கும் அவல நிலையில், போராட்டங்களுக்கும், கருத்துகளுக்கும் கைது வேட்டைகள் நடத்தப்படுவது முற்றிலும் ஜனநாயக விரோத செயலாகும். மாற்றம் என்ற பெயரில் அதிகாரத்தை அடைந்து, அதே அதிகாரத்தை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்துவதற்கு கடும் கண்டனம்’’ தெரிவித்துள்ளனர்.

ஆனால் தவெகவினர், ‘’கோவை விஜய் விசிட்டில் வேண்டுமென்றே வில்லங்கம் செய்து சலசலப்பு கிளப்பியவர். என் மீது முடிந்தால் கேஸ் போட்டுப் பார் என்று மேடையில் சவால் விட்டார். இப்படிப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தேவையில்லாமல் பேசுபவர்களுக்கு அச்சம் வரும். அடுத்து சாட்டை துரைமுருகனைத் தூக்குங்க’’ என்று வேண்டுகோள் வைக்கிறார்கள். எந்த நேரமும் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்படலாம் என்பதால், அவர் நடுக்கத்தில் இருக்கிறாராம்.

நடக்கட்டும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link