News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முந்தைய திமுக அரசு ஏராளமான மசோதாக்களை நிறைவேற்றி கவர்னர் மாளிகைக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து எந்த ஃபைலும் நகராது. அதை திமுகவினர் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். மசோதா நிறைவேற்றியதுடன் தங்கள் வேலை முடிந்துவிட்டது என்று அமைதியாகிவிடுவார்கள்.

ஆனால், இப்போது ஆட்சி மாறியதும் காட்சியும் மாறியிருக்கிறது. விஜய்யின் தவெக அரசு தனது முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றிய 13 மசோதாக்களில் 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பது சரித்திர சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றிய மசோதாக்களில் டிடிசிபி திருத்தச் சட்டம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்கள் வழங்குவது தொடர்பான சட்டம், தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையச் சட்டம், டாஸ்மாக் மதுபானங்கள் மீதான மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு வழங்கும் சட்டம் போன்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இதில், தனியார் பல்கலைக்கழகத்திற்கு குறைந்த நிலத்தில் அனுமதியளிக்கும் மசோதா மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு சேவை செய்வது என்றால் மசோதாக்கள் நிறைவேறி பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று திமுகவுக்கு பாடம் எடுத்திருக்கிறார் விஜய். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link