News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

சிறுத்தை எப்பொழுது சிறுத்தையாக மாறும்

தி.மு.க. கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எந்த சத்தமும் போடாமல் இரண்டு சீட்டுக்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டுவிட்டார்கள். ஆனால், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகளால் இன்னமும் உடன்பாட்டுக்கு வர முடியவில்லை. இரண்டு தனித் தொகுதிகள் ஒரு பொதுத்தொகுதி என்று கேட்டு வருகிறார் திருமாவளவன். தங்கள் கட்சி மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது, எல்லா காலகட்டத்திலும் தி.மு.க.வுக்கு துணையாக நிற்கிறது. எனவே, இரண்டு சீட் போதாது என்று திருமாவளவன் கோரிக்கை வைக்கிறார். இதெல்லாம் நிஜம், நியாயம் என்றாலும் தி.மு.க இந்த […]

விவசாயிகளுக்கு எதிராக வில்லத்தனம்

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 10 வருடங்கள் நிறைவடையப் போகிறது. இந்த காலகட்டத்தில் சீனப் படைகள் பல முறை நமது எல்லைக்குள் வந்து ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமின்றி, நமது நிலங்களையும் பறித்துக்கொண்டது. இதுவரை சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து ஒரே ஒரு முறை கூட பிரதமர் பேசியதே இல்லை. அதேநேரம், விவசாயிகள் டெல்லியை நோக்கி வருகிறார்கள் என்று செய்தி கேட்டதுமே, தன்னுடைய ஆட்சியின் வீரியத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். விவசாயிகள் வரும் பாதைகளை அடைத்து வைப்பது, ரோடுகளில் ஆணிகளை […]

கதவு திறந்திருக்கு…. வீட்டை காணோமே பாஸ்..?

கூட்டணிக் கதவுகள் திறந்தே கிடக்கின்றன என்று ஒவ்வொரு மீட்டிங்கிலும் மீண்டும் மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தாலும், அ.தி.மு.க. கதவுகள் திறக்கப்படவே இல்லை. அண்ணாமலை மாற்றப்படாத பட்சத்தில் பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. ஆனால், அண்ணாமலையை மாற்றுவதற்கு அமித் ஷாவின் ஈகோ இடம் கொடுக்கவில்லை. ஆகவே, இரண்டு பக்கமும் கண்ணாமூச்சு ஆட்டம் தொடர்ந்து நடக்கிறது. எதிர்முகாம் தி.மு.க.வில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடமே ஒதுக்கி தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். […]

அதிமுகவுக்கு கூட்டணி அம்பு..

கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டு விட்டன, பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி இப்போது மேடைக்கு மேடை பேசத் தொடங்கியிருக்கிறார். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக பா.ஜ.க. கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று பா.ஜ.க. பெருந்தலைகள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதேநேரம், அ.தி.மு.க.வில் அத்தனை அணிகளும் ஒன்றாக இணைந்துவிடும் என்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இப்போதும் நம்புகிறார்கள். இந்த நிலையில், கூட்டணி வைக்கவில்லை என்றால் வலிமையாக தி.மு.க.வுக்கு எதிராக அத்தனை கட்சிகளும் அம்பலப்பட்டுப் […]

ப்ளீஸ் மோடிஜி நேருவை விட்டுருங்க…

பிரதமர் மோடியின் உரை என்றால் அதில் கண்டிப்பாக சில விஷயங்கள் இடம் பெறும். முதல் விஷயம், இந்தியா விரைவில் வல்லரசாக மாறப்போகிறது என்பார். அதற்கு அடுத்தபடியாக இத்தனை காலமும் இந்தியா அடைந்த அத்தனை தோல்விகளுக்கும் காரணம் காங்கிரஸ் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு என்று குற்றம்சாட்டுவார். இப்படியே 10 ஆண்டுகளை ஓட்டிவிட்டார். மூன்றாவது தேர்தலை சந்திக்க இருக்கும் நேரத்திலும், 2080ல் இந்தியா வல்லரசு ஆகப்போகிறது, நேருவே அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் என்று மீண்டும் குற்றம் சாட்டி பேசிவருகிறார். […]

கப்பு முக்கியம் விஜய்…

சினிமாவில் அந்தரத்தில் பல்டியடித்து, ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப் செய்து எதிரிகளை பந்தாடுவதில் நடிகர் விஜய் கில்லாடி. அதே பாணியில் அரசியலிலும் எடுத்தவுடன் நேரடியாக முதல்வர் போட்டியில் களம் இறங்குவதற்கு தமிழக வெற்றி கழகம் தொடங்கிவிட்டார். இதோ வரப்போறேன்… அதோ வரப்போறேன் என்றெல்லாம் பாச்சா காட்டிவந்த பாட்ஷா ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைவதற்கு முடிவு எடுத்து, அதே வேகத்தில் சுதாரித்து எழுந்துவிட்டார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்ற தைரியத்தில் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், அடுத்தடுத்த […]

400 தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ.க. வகுத்துள்ள புது வியூகம்!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது பாஜக. அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநில பாஜக தலைவர்களிடம் அக்கட்சியின் தேசிய  தலைவர் ஜெ.பி.நட்டா தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.   இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டுள்ளார். தொடர்ந்து இந்தியா கூட்டணி பலமிழந்து வருவது பாஜகவுக்கு […]

சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லீங்க… சமாளிக்கிறார் ரஜினி

லால் சலாம் மேடையில் ஐஸ்வர்யா, ‘என்னுடைய தந்தை ரஜினியை சங்கி என்று நிறைய பேர் விமர்சனம் செய்கிறார்கள். உண்மையில் என்னுடைய தந்தை அப்படிப்பட்டவர் இல்லை’ என்று வருத்தப்பட்டார். இதையடுத்து சங்கி என்பது கெட்டவார்த்தை என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்று சமூகவலைதளத்தில் பலத்த சலசலப்பு உண்டானது. இதற்கு விளக்கம் தெரிவித்த ரஜினி, ‘சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லை. கெட்ட வார்த்தை என்ற அர்த்தத்தில் ஐஸ்வர்யா சொல்லவில்லை’ என்று தெரிவித்தார். ஆனாலும், சங்கி என்பது கெட்ட வார்த்தை இல்லீங்க, […]

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயுதமாக பயன்படுத்தப்படும் அயோத்தி ராமர் கோவில்

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு  என்ற போதிலும்  தற்போது நடந்து வரும்  அனைத்து நிகழ்வுகளும்  இந்த கோட்பாட்டினை கேள்விக்குறியாக்கி வருவதாக  எதிர்க்கட்சிகள்     கடுமையாக விமர்சித்து வருகின்றன.  அந்த வகையில்    அயோத்தியில்  புதிதாக திறக்கப்பட்டுள்ள ராமர் கோவில்  பல்வேறு சர்ச்சைகளையும்  கேள்விகளையும்  கிளப்பியுள்ளது.  மேலும்   ராமர் கோவில்  வருகிற  நாடாளுமன்ற  தேர்தலில்  பாஜக வெற்றி பெறுவதற்கு  ஒரு பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.   மேலும்  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராம பக்தர்கள்  அயோத்திக்கு படையெடுத்து […]

சர்ச்சைக்கு அஸ்திவாரமிட்ட அயோத்தி ராமர் கோவில்!

அயோத்தி ராமர் கோவில் மிகவும் பிரமாண்டமா முறையில் கட்டி முடிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள், சினிமாதுறையினர் மற்றும் விளையாட்டுத் துறை ஜாம்பவான்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.   இது ஒரு புறம் இருக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அயோத்தி ராமர் கோவில் திறப்பு குறித்து பல்வேறு கேள்விகளையும் அதிருப்திகளையும் வெளியிட்டு வருகிறது. மேலும் தங்களை புறக்கணித்துவிட்டதாகவும் பேச்சுகள் எழுந்தன.   மதசார்பற்ற இந்தியாவிற்கு பா.ஜ.க. மதசாயம் பூசுவதாக பல்வேறு […]