News

Follow Us

சினிமாவில் அந்தரத்தில் பல்டியடித்து, ஹை ஜம்ப், லாங்க் ஜம்ப் செய்து எதிரிகளை பந்தாடுவதில் நடிகர் விஜய் கில்லாடி. அதே பாணியில் அரசியலிலும் எடுத்தவுடன் நேரடியாக முதல்வர் போட்டியில் களம் இறங்குவதற்கு தமிழக வெற்றி கழகம் தொடங்கிவிட்டார்.

இதோ வரப்போறேன்… அதோ வரப்போறேன் என்றெல்லாம் பாச்சா காட்டிவந்த பாட்ஷா ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைவதற்கு முடிவு எடுத்து, அதே வேகத்தில் சுதாரித்து எழுந்துவிட்டார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என்ற தைரியத்தில் கட்சி தொடங்கிய கமல்ஹாசன், அடுத்தடுத்த இரண்டு தேர்தல்களில் விழுந்து உடல் முழுவதையும் புண்ணாக்கிக்கொண்டு, இப்போது தி.மு.க. கூட்டணியில் ஒதுங்கிவிட்டார்.

இதையெல்லாம் கண்ணுக்கு முன்பு பார்த்தபிறகும் நடிகர் விஜய், எந்தவொரு அரசியல் பயிற்சியும் பெறாமல் நேரடியாக போட்டியில் குதித்திருப்பதைப் பார்க்கும்போது, அவருக்குக் கிட்டைக்கப்போகும் கப்பு ரொம்பவே பெரிசாக இருக்குமென்றே தோன்றுகிறது.

இன்னும் வேகமாக பாயுங்க விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link