News

Follow Us

தி.மு.க. கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எந்த சத்தமும் போடாமல் இரண்டு சீட்டுக்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டுவிட்டார்கள். ஆனால், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகளால் இன்னமும் உடன்பாட்டுக்கு வர முடியவில்லை.

இரண்டு தனித் தொகுதிகள் ஒரு பொதுத்தொகுதி என்று கேட்டு வருகிறார் திருமாவளவன். தங்கள் கட்சி மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது, எல்லா காலகட்டத்திலும் தி.மு.க.வுக்கு துணையாக நிற்கிறது. எனவே, இரண்டு சீட் போதாது என்று திருமாவளவன் கோரிக்கை வைக்கிறார்.

இதெல்லாம் நிஜம், நியாயம் என்றாலும் தி.மு.க இந்த சீட் பேரத்தில் கறாராகவே இருக்கிறது. கடந்த முறை போலவே 2 சீட். அதிலும் ஒரு சீட்டுக்கு உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேற நினைத்தால்… அங்கே எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. போதிய வலிமையுடன் இல்லை. அதோடு அங்கு ராமதாஸ் இருக்கிறார் என்பதும் மைனஸ். 

எனவே, எத்தனை அவமானப்படுத்தினாலும் கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார் திருமா… எத்தனை உயரமாகத் தாவினாலும் அந்த இரண்டு பிஸ்கெட்டுக்கு மேல் கிடைக்காது திருமா…

இந்த அவமானத்தை சகித்துக்கொள்வாரா அல்லது தைரியமாக வேறு கூட்டணிக்குப் போவாரா என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link