News

Follow Us

கூட்டணிக் கதவுகள் திறந்தே கிடக்கின்றன என்று ஒவ்வொரு மீட்டிங்கிலும் மீண்டும் மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தாலும், அ.தி.மு.க. கதவுகள் திறக்கப்படவே இல்லை. அண்ணாமலை மாற்றப்படாத பட்சத்தில் பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. ஆனால், அண்ணாமலையை மாற்றுவதற்கு அமித் ஷாவின் ஈகோ இடம் கொடுக்கவில்லை.

ஆகவே, இரண்டு பக்கமும் கண்ணாமூச்சு ஆட்டம் தொடர்ந்து நடக்கிறது. எதிர்முகாம் தி.மு.க.வில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடமே ஒதுக்கி தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். இவர்கள் இன்னமும் கதவை பார்த்துக்கொண்டு காத்திருந்தால் என்ன நடக்கப்போகிறது..? 

கதவு இருக்கு ஆனால் பா.ஜ.க.வுக்கு வீடு இல்லை என்பதால் பா.ம.க., தே.மு.தி.க.வும் தங்களுக்கு இரட்டை இலையே பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள்.  தமிழகத்திற்கு பிரதமர் வரும் நேரத்திலாவது பஞ்சாயத்து முடிகிறதா அல்லது தனியே நின்று மீண்டும் அவமானப்படப் போகிறதா பா.ஜ.க.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link