திருவள்ளுவரை கூட விட்டுவைக்காத ஆளுநர் ஆர்.என்.ரவி!

காவி வேட்டி அணிந்த திருவள்ளுவர் படம் குறித்த விவகாரத்தால் தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. தமிழ்நாடு என்ற பெயரை தொடர்ந்து தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உலகப்பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை காவி உடை அணிந்த வகையில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. பொதுவாக திருவள்ளுவர் தமிழக அரசு பாடநூல்களிலும், […]
காவி அணிந்த திருவள்ளுவர்: தமிழக ஆளுநரின் திட்டம்தான் என்ன?

திருவள்ளுவருக்கு காவி பூசி மத அடையாளம் கொடுத்தது தொடர்பாக திமுக அரசு தொடர்ந்து தனது கண்டனத்தை தெரிவித்து வருகிறது. திராவிட மாடல் என்ற பெயரில் திமுக அரசு இயங்கி வருகிறது. இதற்கிடையில் சனாதன பேச்சு குறித்த விவகாரமும் ஓய்ந்தபாடில்லை. இருப்பினும் என் மீது சுமத்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக சந்திப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக தெரிவித்துள்ளார். இருப்பினும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் செல்லும் இடங்களில் எல்லாம் சனாதனம் குறித்த தனது நிலைப்பாட்டை […]
ட்ரோலுக்கு ஆளான கலைஞர் 100 விழா!

மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் புகழை கவுரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலைஞர் 100 விழா தற்போது நெட்டீசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக திரைத்துறை சார்பில் மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதியின் ‘கலைஞர் 100’ விழா சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அனைத்து திரையுலக ஜாம்பவான்களுக்கும், நடிகர், நடிகைகள், தயாரிபபாளர்கள், இயக்குனர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நயன்தாரா, […]
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற காய் நகர்த்தும் பா.ஜ.க.!

இந்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தொடர்ந்து இந்தியா கூட்டணி குறித்தும் அதன் உறுப்பினர்கள் குறித்தும் பல்வேறு எதிர்மறை கருத்துகளை பதிவு செய்து வருகிறது. பா.ஜ.க.வின் 9 ஆண்டு கால ஆட்சி இந்தியாவை உலக நாடுகள் மத்தியில் தலைநிமிர செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் […]
மாநிலங்களில் திணிக்கப்படும் இந்தி மொழி?

இந்தி தெரியாது போடா என்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக பல்வேறு கோஷங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்தனர். ஆனால் தற்போது பா.ஜ.க.வின் 9 ஆண்டு ஆட்சி காலத்தின் பிரதான கொள்கையாக பார்க்கப்படுவது இந்தி மொழி புழக்கத்தில் அல்லாத மாநிலங்களில் அம்மொழியை திணிப்பதே ஆகும். அந்த வகையில் தமிழகத்தில் இந்தி மொழி மீண்டும் திணிக்கப்படும் சூழ்நிலை மேலோங்கியுள்ளது. வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று அரியணை ஏறுமேயானால், […]
கருப்பு நிலா கேப்டன் விஜயகாந்த்!

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்த் நேற்று (28.12.2023) நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தியை கேட்டு துடித்துப் போன கட்சித் தொண்டர்கள் ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் அவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். கருப்பு வைரம், கருப்பு நிலா, கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்களாலும் கட்சி தொண்டர்களாலும் அன்புடன் அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் இன்று நம்முடன் இல்லை. இருப்பினும் […]
அமித்ஷா மவுனம் காப்பது ஏன்?

கடந்த டிசம்பர் 13ம் தேதி பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அல்லது உள்துறை மத்திய மந்திரி அமித்ஷா இவர்களில் யாராவது பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இரு அவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் அவர்களை சஸ்பெண்ட் செய்து வெளியேற்றிய பா.ஜ.க. ஆட்சி பாசிச ஆட்சி என்று சமூகவலை தளங்களில் கண்டனங்கள் பறந்து வருகின்றன. குறைந்தபட்சம் உள்துறை மத்திய மந்திரி அமித்ஷா […]
ரூ.6,000 எப்படி போதுமானதாக இருக்கும்?

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகையாக ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து அந்தந்த ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டிற்குள் புகுந்த மழைவெள்ளத்தில் அனைத்து பொருட்களும் நாசமானதுடன், பல்வேறு சான்றிதழ்களும் அழிந்துவிட்டதாக பொதுமக்கள் கதறுகிறார்கள். இதனால் சேதத்தை மதிப்பிடும் போது தமிழக அரசு கொடுப்பதாக அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரணத்தொகை எப்படி போதுமானதாக இருக்கும் என்று அதிருப்தியுடன் தெரிவித்து வருகின்றனர்.
ரூ.4,000 கோடி எங்கேதான் போனது?

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.4,000 கோடி என்னதான் ஆனது? எங்குதான் போனது என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் பருவமழையின் போதும் சென்னை நகரம் தண்ணீரில் மிதக்கும் தீவாக மாறுவது தொடர்கதையாகிவிட்டது. மழைநீர் வடிகால் பணிக்காக ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டது. மேலும் பணிகள் குறித்து களத்தில் ஆய்வு செய்ததாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் செய்திகளில் வெளியானது. அப்படியென்றால் ஏன் மழைநீர் தேங்கியது, […]
பெண் எழுத்தாளருக்கு உதவிய துர்கா ஸ்டாலின்! வைரல் பதிவு!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர் இந்துமதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் செய்த உதவி குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. மின்சாரம் தண்ணீர் இருக்கிறதா என்று போன் மூலம் துர்கா ஸ்டாலின், எழுத்தாளர் இந்துமதியிடம் விசாரித்த போது, எங்களை ஜீப் மூலம் உட்லண்ட்ஸ் ஓட்டல்ல விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். எப்படியோ ஒரு வழியாக துர்கா ஸ்டாலின் மூலம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டை விட்டு பத்திரமாக வெளியேறியதாக எழுத்தாளர் இந்துமதி […]

