News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

எங்க ஏரியா உள்ளே வராதே…

2024 மக்களவைத் தேர்தல் நிறைய அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. அதாவது ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அவரவர் சொத்துக்களை காப்பாற்றவும், அவரை சேர்ந்தவர்கள் நல்வாழ்வுக்காகவுமே அரசியல் செய்கிறார்கள். அதற்காக ஆளுக்கொரு சித்தாந்தத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.ராமர் கோயிலையும் இந்துக்களின் காவி நிறத்தையும் காட்டி இந்தியா முழுவதையும் அப்படியே விழுங்கி, அதை அதானிக்கும் அம்பானிக்கும் கொடுப்பதற்கு பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றால், தமிழகத்தில் ஆரியத்தை எதிர்பதாக திராவிடத்தின் பெயரைச் சொல்லி குடும்ப அரசியல் கொடி கட்டி […]

நிறம் மாறும் தாமரை மோடி

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற டயலாக் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, நரேந்திர மோடிக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும். கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்திருக்கும் நரேந்திர மோடி, அவரது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல் ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறார். 2014 தேர்தலில் மோடியா லேடியா என்று கேட்டு தாமரையை தமிழ்நாட்டில் இருந்து ஓட வைத்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா என்பதை பிரதமர் மோடி மறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு அந்த கட்சியை […]

ஏழைகளுக்கான எம்.பி. கோட்டாவில் நிர்மலா சீதாராமன்

ஒரு நாட்டின் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு தேர்தலில் நிற்பதற்கு பணம் இல்லை. அந்த அளவுக்கு நாட்டின் நிதிநிலைமை கேவலமாக இருக்கிறது என்று பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பணம் இல்லை என்பதால் நிற்கவில்லை என்று பேசியதை அராஜகத்தின் உச்சம் என்றே கூற வேண்டும் மக்களவைத் தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று நிருபர் கேட்கும்போது, ஏதேனும் காரணம் கூறியிருக்கலாம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏனென்றால் தேர்தலில் நிற்பதற்கு டெபாசிட் பணம் மட்டும் கட்டினாலே போதும். […]

எங்க தமிழ்த் தாயை விட்ருங்க மோடிஜி…

தமிழ் நாடு பற்றி பேசும் நேரத்தில் எல்லாம், ‘எனக்கு தமிழ் மொழி பிடிக்கும்’, ‘தமிழ் தாய் மொழியாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்’ ‘தமிழ் என் உயிர் மூச்சு’ என்றெல்லாம் பேசுகிறார் மோடி. அதேநேரம், தமிழ் மொழி வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது இல்லை. தமிழ் அறிஞர்களுக்கு விருது கொடுப்பதில்லை. செத்துப்போன மொழியான சமஸ்கிருதத்துக்கு அள்ளிக்கொடுக்கும் மோடி தமிழ் மொழிக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை.  அலுவல் மொழியாக தமிழ் இடம் பெறும் என்று அறிவிக்கவில்லை. தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி […]

நல்ல கூட்டணி யாருமே இல்லையா..?

நல்ல கூட்டணி யாருமே இல்லையா..? 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சியினரும், ‘கள்ளக் கூட்டணி’ என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் பிரதமர் மோடி மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு கூட எடப்பாடி பழனிசாமி பேசவே இல்லை. ஆகவே, அவர்களுக்குள் கள்ளக்கூட்டணி இருக்கிறது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமியோ, ‘எதிர்கட்சியாக இருந்த நேரத்தில் கோ பேக் மோடி சொன்ன ஸ்டாலின் இப்போது கமான் கமான் என்று கூப்பிடுகிறார். டெல்லியில் போய் […]

துரை வைகோவை கதற வைக்கும் திராவிட மாடல்..!

பெரியண்ணன் மனப்பான்மையுடன் கூட்டணிக் கட்சிகளை அணுகுவதே தி.மு.க.வின் தேர்தல் ஸ்டைல். இந்த தேர்தலில் ம.தி.மு.க.வினர் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தனிச்சின்னத்தில் நிற்கப் போகிறோம் என்று வைகோ உறுதிபட தெரிவித்துவிட்டார். அதன்படி திருச்சி  தொகுதி ஒதுக்கப்பட்டு, அங்கு துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். திருச்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய தி.மு.க.வினர் ம.தி.மு.க.வை முடிந்த வரையிலும் அவமானப்படுத்துவது போலவே பேசினார்கள். நீங்கள் மக்களைத் தேடிப் போக வேண்டாம், நேருவை சுற்றிச்சுற்றி […]

மோடியின் அடுத்த டார்கெட் ராகுல் காந்தியா..?

எதிர்க் கட்சிகளே இல்லாமல் தேர்தலில் ஜெயித்துவிட வேண்டும் என்பது போன்று ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு அதிரடிகளை நிகழ்த்திவருகிறது. காங்கிரஸ் கூட்டணிக் கட்சித் தலைவரான ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்தபோதே கைது செய்தது. வேறு ஒருவரை முதல்வராக்கிவிட்டு அவர் ஜெயிலுக்குப் போனார்.அதேபோல் இண்டியா கூட்டணியில் தற்போது இணைந்து தீவிரம் காட்டி வரும் அரவிந்த் கெஜ்ரிவாலை மடக்குவதற்கு எத்தனையோ முறை முயன்றது. ஆனாலும், அவர் பா.ஜ.க.வுக்கு எதிராக உறுதியாக நின்ற காரணத்தால் அவரை அமலாக்கத்துறை மூலம் கைது செய்து […]

காட்டு யானைகளுடன் போட்டியிடும் கன்றுக்குட்டி

காட்டு யானைகளுடன் போட்டியிடும் கன்றுக்குட்டி மூன்றாவது முறையாக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஜெயித்தே தீருவோம் என்று தேசியக் கட்சியான பா.ஜ.க. தீவிரமான பிரசாரத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது.  அதனை தடுத்து நிறுத்துவதற்காக மாநிலக்கட்சிகளின் துணையுடன் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது. குறிப்பாக நம் தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளும் இந்த தேர்தலை தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கையில் இருந்த சின்னத்தையும் பறி கொடுத்துவிட்டு, வேறு ஒரு சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் […]

ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்

பரபரப்பு அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கும் முன்னாள் வி.ஐ.பி.களை எல்லாம் தேடிப்பிடித்து கட்சியில் சேர்த்துவருவதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முழு நேரப் பணியாக செய்துவருகிறார். அதேபோல் லெட்டர் பேடு கட்சிகளையும் கூட்டணி சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார். இந்த நிலையில்தான் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்தார் அண்ணாமலை. சரத்குமாரின் பேரத்தைக் கேட்ட அண்ணாமலை, ஒட்டுமொத்தமாக கட்சிக்கே ரேட் பேசிவிட்டார். கட்சி நடத்துகிறேன் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் பெரிய கட்சிகளைத் தேடிப் பிடித்து […]

இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு பா.ஜ.க. இறுதிச்சடங்கு..!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை பா.ஜ.க. அரசு அமல்படுத்தியிருக்கிறது. நம் இந்திய நாட்டில் மட்டுமே ஜாதி, மதம் என மக்களைப் பிரிக்காத குடியுரிமைச் சட்டம் இருக்கிறது. இந்த சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறது மத்திய அரசு.  இந்த சட்டத்திருத்தம் அண்டை நாடுகளில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் வெளிப்படையாக அழைப்பு கொடுக்கிறது. அதே நேரம் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும், அவமானத்தையும் கொடுக்கிறது. இந்த சட்டம் நேரடியாக முஸ்லிம்களுக்கு எதிரானது, இலங்கைத் […]