News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சாதாரண சைக்கிள் கடை டூ கோடீஸ்வர எம்.எல்.ஏ தி-நகர் சத்யாவை வளைத்த லஞ்ச ஒழிப்பு துறை ! அதிர வைக்கும் சொத்துப்பட்டியல்

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீது நேற்று (செப்.12ம் தேதி) காவல் நிலையத்தில் மாலை 4 மணியளவில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 25 பக்கங்களைக் கொண்ட அந்த முதல் தகவல் அறிக்கையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா தனது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தார் மீது வாங்கியுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்த அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில், கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.நகர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த […]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் தேரோட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற ஆவணித் தேரோட்டம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.   திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாகும். இங்கு கடந்த 4ம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சுவாமி& அம்பாள் பல்வேறு வாகனங்களிலும் அலங்காரத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.   இந்நிலையில் […]

கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் அசோக் செல்வன்! புகைப்படங்கள் வைரல்

திருநெல்வேலியில் நடிகர் அசோக் செல்வன்& கீர்த்தி பாண்டியன் காதல் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. 90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகரான அருண்குமாரின் 3வது மகளான கீர்த்தி பாண்டியனும், நடிகர் அசோக் செல்வனும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவிக் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற தகவலும் வெளியானது. அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது இவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் […]

முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா ஆவணங்கள் சிக்கியதா? லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யாவின் வீடு, அலுவலகம், அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   கடந்த 2016ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் சத்ய நாராயணன் என்கிற தி.நகர் சத்யா. இவர் தன் சொத்து மதிப்பை மறைத்து குறைவாக காட்டி தி.நகர் தொகுதியில் போட்டியிட்டதாகவும், அதன் பின்னர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. […]

சனாதனத்திற்கு எதிராக பேசும் நாக்கை பிடுங்குவோம்! மத்திய மந்திரி ஆவேசம்!

சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கைப் பிடுங்கிவிடுவோம் என்று மத்திய அமைச்சர் அச்சுறுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் உச்சகட்டமாக அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் […]

விஷாலுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது! மார்க் ஆண்டனி வெளியிட தடை நீங்கியது!

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியிட இருந்த தடை நீங்கியுள்ளது.   நடிகர் விஷால், எஸ்.சூர்யா நடிப்பில் டைம் டிராவல் கதைக்களத்துடன் தயாராகியுள்ள படம் மார்க் ஆண்டனி. தொடர்ந்து விஷாலின் படங்கள் தோல்வியடைந்த நிலையில் அவரின் முழுநம்பிக்கையாக இருப்பது மார்க் ஆண்டனி படம்தான்.   இதன் டிரெய்லர் வெளியாகி ரகிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக சில்க் ஸ்மிதா நடிப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை […]

ஸ்டாலினை காக்க வைத்து கடுப்பேத்திய ரகுமான் !

ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து திரைப்படங்களில் இசையமைத்து வந்தாலும், தனது ரசிகர்களுக்காக அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன் மூலம் வரும் பணத்தையும் பல்வேறு நற்காரியங்களுக்காக செலவிட்டு வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை உருவாக்கியுள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற இருந்த ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி, தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அதற்காக வாங்கிய டிக்கெட்டுகளை அடுத்த நிகழ்ச்சியின் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு […]

அமலாக்கத்துறையின் அடுத்த செக்! முதலமைச்சர் மருமகனின் ஆடிட்டர்தான்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், மணல்குவாரி அதிபர்கள், தொழில் அதிபர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ஆடிட்டரான சண்முகராஜ் […]

சென்னை தலைமைச் செயலகம் எதிரில் பரபரப்பு! தீக்குளிக்க முயன்ற குடும்பம்!

சென்னை தலைமைச் செயலகம் எதிரில், கண்பார்வையற்ற முதியவர், தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை சென்னை தலைமைச் செயலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று அங்கு பார்வையற்ற முதியவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வந்து சேர்ந்தார். அப்போது மூவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ªண்ணையை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

போலீசில் நேரில் ஆஜராகாத சீமான்! வழக்கறிஞர் சொன்ன முக்கிய தகவல்!

நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக போலீஸ் சம்மன் அனுப்பிய நிலையில் நடிகர் சீமான் ஆஜராகவில்லை என்ற தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டதாகவும், 7முறை கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் நடிகை விஜயலட்சுமி காவல்நிலையத்தில் புகார்மனு அளித்திருந்தார். நீண்ட காலமாகவே புகைந்து கொண்டிருந்த விஜயலட்சுமி& சீமான் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் […]