News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

download (6)

சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கைப் பிடுங்கிவிடுவோம் என்று மத்திய அமைச்சர் அச்சுறுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த பேச்சுக்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதில் உச்சகட்டமாக அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினும், சாமியாரும் மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தற்போது சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, சனாதனத்திற்கு எதிராக பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும். கண்களை தோண்ட வேண்டும். சனாதனத்திற்கு எதிராக பேசும் யாரும் அரசியல் அதிகாரம் அதஸ்தை தக்க வைக்க முடியாது. நமது முன்னோர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சனாதன தர்மத்தை பாதுகாத்தனர். சனாதனத்தை ஒழிப்பதாக பேசுபவர்களை  நாங்கள் பொறுத்துக் கொள்ளமாட்டோம்’’ என்று அச்சுறுத்தும் வகையில் பேசினார்.

மத்திய அமைச்சராக இருந்து கொண்டு இப்படி பொது வெளியில் நாக்கை பிடுங்க வேண்டும், கண்களை தோண்ட வேண்டும் என்று அச்சுறுத்தும் வகையில் பேசியது சரி கிடையாது என்று நெட்டீசன்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link