Share via:
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யாவின் வீடு, அலுவலகம், அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் சத்ய நாராயணன் என்கிற தி.நகர் சத்யா. இவர் தன் சொத்து மதிப்பை மறைத்து குறைவாக காட்டி தி.நகர் தொகுதியில் போட்டியிட்டதாகவும், அதன் பின்னர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இவ்வழக்கில் தகுந்த முகாந்திரம் இருந்தால் விசாரணையை முடித்து 2 மாதத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த்து இருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கின் அடிப்படையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் ஆவணங்கள் ஏதேனும் சிக்கியதா என்பது குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.