Share via:
சென்னை தலைமைச் செயலகம் எதிரில், கண்பார்வையற்ற முதியவர், தனது மனைவி மற்றும் மகனுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை சென்னை தலைமைச் செயலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று அங்கு பார்வையற்ற முதியவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வந்து சேர்ந்தார்.
அப்போது மூவரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ªண்ணையை தங்கள் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மூவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதைத்தொடர்ந்து கண்பார்வையற்ற முதியவர், அவரது மனைவி மற்றும் மகனை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இப்படி திடீரென்று தீக்குளிக்க முயற்சி செய்த அந்த பார்வையற்ற முதியவர் யார்? எதற்காக குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்தார்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தினால் விடை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.