பொங்கல் பண்டிகை! விரைவு ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (செப்.13) முதல் விரைவு ரெயில்களின் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்குகிறது. டிக்கெட்டுகளை விரைந்து பெற பயணிகள் தற்போது முதலே தயாராகி வருகின்றனர். கல்விக்காகவும், பணிக்காகவும் சொந்த ஊரைவிட்டு செல்லும் பொதுமக்கள் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே ரெயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கிவிடும். அந்த வகையில் அடுத்த […]
‘‘தலைவர் 171’’ திரைப்படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலகளவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன்&2, விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மொத்த வசூலையும் முறியடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு […]
நானே பலி ஆடு ஆகிறேன்’- ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்!

மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி விவகாரம் தொடர்பாக வரும் காலங்களில் இது போன்று அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க நானே பலி ஆடு ஆகிறேன் என்று இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி என்றால் ரசிகர்களுக்கு தீபாவளிதான். அந்த வகையில் பல்வேறு நகரங்களில் இசைக்கச்சேரி நடத்திய ஏ.ஆர்.ரகுமான் கடந்த ஆகஸ்டு மாதம் சென்னையில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் போதாத காலம் மழை பெய்ததால் இசைக் கச்சேரியை ஒத்தி வைக்கிறேன். […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: தகுதியுள்ள 1.06 கோடி பேர்! முக்கிய தகவல்கள் உள்ளே!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வருகிற 15ம் தேதி முதல் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் அறிவித்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகையாக மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வருகிற 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டு வரும் […]
மெட்ரோ ரெயில் கட்டுமானப்பணிகள்: இன்னும் எத்தனை விபத்துகள் நேரிடுமோ

மெரினா கலங்கரை விளக்கம் முதல் போரூர் வரையில் மெட்ரோ ரெயில் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போரூர், ஆற்காடு சாலையில் மேம்பால தூண் அமைக்கும் பணிக்காக ராட்சத துளையிடும் எந்திரத்தை பயன்படுத்தினார்கள். 100 டன் எடை கொண்ட ராட்சத துளையிடும் எந்திரம், சுமார் 200 அடி உயரத்தில் இருந்து அஞ்சுகம் நகரில் உள்ள பாக்கியநாதன் என்பவரின் வீட்டின் மீது வேகமாக மோதியது. பெரும் சத்தத்துடன் எந்திரம் மோதியதில் அந்த வீட்டின் […]
வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஜவான்’ திரைப்படம்!

நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியான 5 நாட்களுக்குள் 525 கோடி ரூபாய் அளவுக்கு வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலிவுட் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மெண்ட் வழங்க, கவுரி கான் தயாரிப்பில் கடந்த 7ம் தேதி வெளியான திரைப்படம் ஜவான். நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே ஜவான் படத்தில் தங்கள் நடிப்பு திறமையை வெளிக்காட்டியிருந்தனர். ஜவான் […]
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களுக்கு செக்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் தற்போது அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரது கைது சட்டப்படியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் […]
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு! அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை கடந்த மாதம் ஆகஸ்டு 12ம் தேதி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதன் பின்னர் […]
ஊழலை மறைக்கவே இந்த நாடகம்! பா.ஜ.க. மீது உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நெய்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதிஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க 100 ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசியது தற்போது இந்தியாவின் மிகப்பெரிய பேச்சுப் பொருளாக மாறியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 260க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இன்னும் இந்த பேச்சு ஓய்ந்த பாடில்லை. அதன்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், […]
அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டை தொடர்ந்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 18வது ஜி20 மாநாடு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த பெருமை தற்போது இந்தியாவுக்கு சொந்தமாகியுள்ளது. யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு ஜி20 மாநாட்டிற்கான அனைத்து வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதால் ஜி20 மாநாடு இனிதே நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை நிரந்த உறுப்பு நாடாக இணைக்கும் நிகழ்வு முத்தாய்ப்பாக அமைந்து பலரின் பாராட்டையும் பெற்றது. மாநாட்டின் […]

