Share via:
திருநெல்வேலியில் நடிகர் அசோக் செல்வன்& கீர்த்தி பாண்டியன் காதல் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகரான அருண்குமாரின் 3வது மகளான கீர்த்தி பாண்டியனும், நடிகர் அசோக் செல்வனும் காதலித்து வருவதாக கிசுகிசு பரவிக் கொண்டிருந்தது. அதைத்தொடர்ந்து விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற தகவலும் வெளியானது.
அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் ‘ப்ளூ ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்த போது இவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன.
அதன்படி திருநெல்வேலியில் இட்டேரி என்ற இடத்தில் உள்ள சேது அம்மாள் பண்ணையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. மேலும் திருமண அழைப்பிதழ் மன்றல் விழா என்ற பெயரில் வழங்கப்பட்டது மிகவும் வைரலானது.
இதைத்தொடர்ந்து அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இது குறித்து அசோக் செல்வன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
எனக் குறிப்பிட்டு திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

