காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை: 2 ராணுவ வீரர்கள், டி.எஸ்.பி. வீர மரணம்!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ அதிகாரிகள் 2 பேர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு&காஷ்மீர் அனந்தநாத் மாவட்டத்தில் உள்ள கரோல் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை கூட்டாக இணைந்து கடந்த வாரம் (செப்.12 மற்றும் 13) தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதைத்தொடர்ந்து ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் டி.எஸ்.பி. […]
ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது! ரகசிய இடத்தில் விசாரணை!

ஆன்மீக சொற்பொழிவாளரும், விஷ்வ பரிஷத் இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன், அம்பேத்கர், வள்ளுவர் உள்ளிட்டோரை இழிவுப்படுத்தி பேசியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அம்பேத்கர், திருவள்ளுவர், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தலைவர்களை ஒருமையில் இழிவாக பேசியும், அவதூறு பரப்பும் வகையிலும் பேசி சர்ச்சையை கிளப்பினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து ஆர்.பி.வி.எஸ். மணியனின் பேச்சுக்கு […]
வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த ஆவின்! முக்கிய தகவல் உள்ளே!

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 வரை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்தவகையில் விற்பனை செய்யப்படும் பால், தயிர், மில்க் ஷேக், பன்னீர், நெய், வெண்ணை, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் தரமான வகையில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்படும் போது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். பால் கொள்முதல் விலை உயரும் போதெல்லாம் இதுபோன்ற […]
ரூ.1000 கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற முடியாமல் போன மகளிர் மேல்முறையீடு செய்வதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (15ம்தேதி) காஞ்சீபுரத்தில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு தங்கள் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை அவர்கள் அளித்த கைப்பேசி எண்ணில் குறுஞ்செய்தியாக வருகிற 18ம் தேதி […]
நடிகர் விஜய், பெற்றோருடன் திடீர் சந்திப்பு! யாரும் சொல்லாத உண்மை தகவல்!

நடிகர் விஜய் தனது பெற்றோருடன் இணக்கமாக இல்லை என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிய நிலையில் தற்போது விஜய் தனது பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நடிகர் விஜய் லியோ திரைப்படப் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ரீலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் கட்சிப்பணி என விஜய் பம்பரமாக சுற்றி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய், நேற்று தனது பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபாவை […]
4 மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் திடீர் ஆலோசனை! முக்கிய பின்னணி தகவல்கள்!

வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். வருகிற 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை மண்டல கள ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆய்வுக் கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கப்பட்டு ஆகிய 4 மாவட்டங்களின் கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் மாவட்டங்கள் வாரியாக […]
24 மணி நேர மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை!

வயிற்று வலிக்காக சிகிச்சை பெற வந்த இளம்பெண்ணிடம் மருத்துவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் போஸ்கோ நகரை «ச்ரந்த 22 வயது இளம் பெண் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் அனுமந்த உபவாச நகரில் செயல்பட்டு வரும் 24 மணி நேரம் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த 35 வயதான தியாகராஜன் என்ற மருத்துவரிடம் தனக்கு ஏற்பட்ட வலிக்கு […]
கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல்! பீதியில் மக்கள்!

கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சளி, காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் கடந்த 2 நாட்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் […]
மலேசியாவை அதிர வைத்த ‘ஜெயிலர்’ வசூல் சாதனை!

உலகளவில் வசூல் சாதனை புரிந்து வரும் ஜெயிலர் திரைப்படம் தற்போது மலேசியாவில் வரலாற்று சாதனை படைத்துள்ளதாக மலேசியாவில் ஜெயிலர் திரைப்படத்தை வெளியிட்ட ஐங்கரன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் இயக்குனர் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருக்கு அடுத்த மைல் கல் என்றே சொல்ல வேண்டும். கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ஓடிடி யில் வெளியான பின்னரும் இன்றும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. […]
விநாயகர் சதுர்த்தி: சென்னையில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி வருகிற திங்கட்கிழமை (செப்.18ம்தேதி) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு என தொடர்ந்து வார விடுமுறை நாட்களும் வருவதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் விநாயகர் சதுர்த்தியை இந்தமுறை சிறப்பாக முன்கூட்டியே கொண்டாட திட்டமிட்டுள்ளனர். எனவே பயணிகளின் வசதியை கருத்தில் […]

