News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசியதற்கே மக்கள் ஸ்டாலினை கொத்துப்புரோட்டா போட்டுவிட்டார்கள் என்று முதல்வர் விஜய் பேசியிருந்தார். இந்த நிலையில் கொளத்தூர் வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, மீண்டும் அவருக்கு நீதிமன்றம் கொத்துப்புரோட்டா போட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் விவிபேட்  சீட்டுகளை 100% எண்ணி, அதன் அடிப்படையில் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் வெற்றியை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்கக் கோரி திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.. ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் முன்பு வந்தது.

கொளத்தூர் தொகுதியில் மொத்தம் 286 இவிஎம் செட் இருந்த நிலையில், 5% இவிஎம்.களை சரிபார்க்க கோரிக்கை விடுக்கப்பட்டது. சரிபார்ப்பு பணிகள் 29.07.2026 அன்று தொடங்கியதாக மனுவில் குறிப்பிடப்பட்டது.

VVPAT செயலிழப்பு, address-tag தொடர்பான முரண்பாடுகள், EVM-களின் பாதுகாப்பு/chain of custody உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக Polling Station No.208-ல் Control Unit, Ballot Unit தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. தேர்தல் ஆணையம், இது தேர்தல் முடிவை நேரடியாகச் சவால் செய்யும் விவகாரம் என்பதால், அரசியலமைப்புச் சட்டத்தின் Article 329(b) காரணமாக இத்தகைய writ petition ஏற்கத்தக்கதல்ல என்று வாதிட்டது.

தேர்தல் முடிவை எதிர்க்க வேண்டுமெனில் Representation of the People Act, 1951-ன் கீழ் election petition தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆனால் EVM verification தாமதமாக நடைபெற்றதால், அந்த சரிபார்ப்பில் தெரியவந்த குறைபாடுகளை வைத்து 45 நாட்களுக்குள் election petition தாக்கல் செய்வது எப்படி சாத்தியம் என்ற கேள்வியை ஸ்டாலின் தரப்பு முன்வைத்தது.

முக்கிய சட்டப்புள்ளி உயர்நீதிமன்றம் மனுவை “not maintainable” (சட்டரீதியாக ஏற்கத்தக்கதல்ல) என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது. முக்கியமாக இந்தத் தீர்ப்பு, “EVM-ல் எந்த முறைகேடும் நடக்கவில்லைஎன்று நீதிமன்றம் கண்டறிந்ததாக அர்த்தமல்ல. தற்போதுள்ள செய்தி அறிக்கையின்படி, மனுவின் maintainability / தேர்தல் தொடர்பான சட்டவழிதான் முக்கியமாக பரிசீலிக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்டாலின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.

இதுகுறித்து தவெகவினர், ‘’ மக்கள் தீர்ப்பில் தோல்விஅதை மாற்ற நீதிமன்றம் சென்றார்அங்கேயும் “Maintainable அல்லஎன மனு தள்ளுபடி! ஸ்டாலினுக்கு கொளத்தூர் தொடர்ந்து கைவிடுகிறது! மக்கள் தீர்ப்பை ஏற்காமல் எத்தனை வாசல் தட்டினாலும், கொளத்தூர் தீர்ப்பு மாறாது.

தோல்வி என்பது மக்களின் தீர்ப்பு என்பதை திமுகவினருக்கே நன்றாகத் தெரியும். ஆனால் அதை ஏற்க மனமில்லாமல், சதி செய்து ஸ்டாலினை தோற்கடித்தார்கள்  என்ற புதிய கருத்தை மக்களிடம் விதைக்க முயற்சி செய்கிறார்கள். வரலாற்றில் முதலமைச்சராக தோல்வியடைந்தவர் என்ற பதிவு வரக்கூடாது என்பதற்காக, தோல்விக்கு ஒரு சதி கதையை உருவாக்குகிறார்கள்.

ஆனால் உண்மை ஒன்றுதான், கொளத்தூரில் கொத்துப்ரோட்டா போட்டது உண்மை! மக்கள் கொடுத்த தீர்ப்பை எந்த கதை சொல்லியும் மாற்ற முடியாது. தோல்விக்கு சதி காரணமல்ல. மக்களின் தீர்ப்பே காரணம்’’ என்று கிண்டல் செய்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link