News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.   பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருடப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.   அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு […]

மெட்ரோ ரெயில் சேவையின் இன்றைய மாற்றம்! பயணிகள் மகிழ்ச்சி!

தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் சேவை இன்று ஒரு நாள் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.   வருகிற 18ம் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தைய நாட்களான சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதாலும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவும், சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் பொதுமக்கள் ரெயில், பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். […]

மாதவிடாய் குப்பி விழிப்புணர்வு: துர்கா ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்!

மாதவிடாய் நேரத்தில் நாப்கினுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பொருட்களின் மென்சுரல் கப் எனப்படும் மாதவிடாய் குப்பிபும் ஒன்று. புனல் வடிவம் கொண்ட இதன் மூலம் மாதவிடாய் ரத்தத்தை சேகரிக்க பயன்படுகிறது. பல்வேறு அளவுகளில் கிடைக்கும் மென்சுரல் கப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆங்காங்கே நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள – நந்தனத்தில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், EnnVee Solutions Pvt Ltd, HLL Lifecare ல்டட்  பிலிலி லிவீயீமீநீணீக்ஷீமீ லிtபீ இணைந்து மாதவிடாய் […]

சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை! பின்னணி என்ன?

சென்னையில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   சென்னையில் இன்று முதல் (செப்.15ம்தேதி) தொடர்ந்து 3 நாட்களுக்கு பாதுகாப்புப் படை ஒத்திகை பயிற்சி நடைபெற இருக்கிறது. நிணீஸீபீவீஸ்-மிக்ஷி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஒத்திகையின் மூலம் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றம் அவற்றை முறியடிப்பது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.   இப்பயிற்சியை சிறப்பாக நடத்தி முடிக்கவும், இதன் எதிரொலியாகவும் சென்னையில் இன்று முதல் வரும் 17ம் தேதி (ஞாயிறு) வரை […]

பாறைக்கு வைத்த வெடியில் சிக்கி 2 பேர் பலி! வேடசந்தூர் அருகே சோகம்!

வேடசந்தூர் கல் குவாரி வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகளை உடைக்க வைக்கப்பட்ட வெடி, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் சிக்கி நாராயணன், மேத்யூ என்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.   மேலும் வெடி விபத்தில் எதிர்பாராத விதமாக சிக்கிய கோபால், […]

தமிழகத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி! மருத்துவத்துறை அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த வாரமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேசமயம் சளி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.   இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிர்ச்சி […]

வேறு நீதிபதிக்கு மாற்ற முடியாது! பொன்முடி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்து உத்தரவிட்டார்.     தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து மறுவிசாரணைக்கு எடுத்துள்ளார்.     இந்த வழக்கு விசாரணை கடந்த 7ம் தேதி மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. […]

127 போலீசாருக்கு அண்ணா பதக்கம்! அரசாணை வெளியீடு!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 போலீசாருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.     முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நாளை (15ம் தேதி) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமும் காஞ்சீபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது.   இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் […]

சிம்பு, தனுஷ்,. விஷால், அதர்வாவுக்கு ரெட் கார்டு! தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி நடிகர்கள் சிம்பு, தனுஷ், விஷால் அதர்வா ஆகிய 4 பேருக்கு ரெட் கார்டு விதிக்கப்படுகிறது. சென்னையில் நேற்று (செப்.13) திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய 4 நடிகர்களுக்கும் ரெட் கார்டு விதிக்கப்படுகிறது. நடிகர் சிம்பு மீது […]

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை! பிரத்யேக ஏ.டி.எம். கார்டு அறிமுகம்!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறும் வகையில் அதற்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.   கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.15ம் தேதி) காஞ்சீபுரத்தில் தொடங்கி வைக்கிறார். தேர்வு செய்யப்பட்ட  மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான பிரத்யேக ஏ.டி.எம். கார்டுகளை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார்.   சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு 8,000 ஏ.டி.எம். கார்டுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த […]