Share via:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற முடியாமல் போன மகளிர் மேல்முறையீடு செய்வதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (15ம்தேதி) காஞ்சீபுரத்தில் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் மகளிருக்கு தங்கள் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை அவர்கள் அளித்த கைப்பேசி எண்ணில் குறுஞ்செய்தியாக வருகிற 18ம் தேதி முதல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்தவர்களில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பும்பட்சத்தில் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ&சேவை மையம் மூலமாக வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இம்மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் நெறிமுறை தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ளது. எனவே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உடனடியாக அதற்கான பணிகளில் இறங்கினால் 1000 ரூபாய் கலைஞர் உரிமைத் தொகையை எளிதாக பெறலாம் கவலை வேண்டாம்.