Share via:
கடலூரில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது சுகாதாரத்துறைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சளி, காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் கடந்த 2 நாட்களில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதற்கிடையில் டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வண்டிப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள், பண்ருட்டியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.
டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட 6 நோயாளிகளும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. இதற்கு ஒரே வழி ஆங்காங்கே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒருபுறம் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.