News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

வயிற்று வலிக்காக சிகிச்சை பெற வந்த இளம்பெண்ணிடம் மருத்துவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பத்தூர் போஸ்கோ நகரை «ச்ரந்த 22 வயது இளம் பெண் நேற்று முன்தினம் இரவு வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் அனுமந்த உபவாச நகரில் செயல்பட்டு வரும் 24 மணி நேரம் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

 

அப்போது பணியில் இருந்த 35 வயதான தியாகராஜன் என்ற மருத்துவரிடம் தனக்கு ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை அளிக்க இளம்பெண் அணுகிய போது விபரீதம் ஏற்பட்டது. மருத்துவர் திடீரென்று இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அங்கிருந்து தப்பித்து வந்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மருத்துவமனை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.

 

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற திருப்பத்தூர் டவுன் போலீசார், பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் தியாகராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி¬¬யில் அடைத்தனர். 24 மணி நேர மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு நடந்த பாலியல் சீண்டல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link