Share via:
ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 வரை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதுமே தனி மவுசு உண்டு. அந்தவகையில் விற்பனை செய்யப்படும் பால், தயிர், மில்க் ஷேக், பன்னீர், நெய், வெண்ணை, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் தரமான வகையில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்படும் போது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். பால் கொள்முதல் விலை உயரும் போதெல்லாம் இதுபோன்ற விலை உயர்வு தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது.
அந்த வகையில் தற்போது ஆவின் நெய்யின் விலை அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அரை லிட்டர் ஆவின் ரூ.50 அதிகரித்து 315 ரூபாயில் இருந்து ரூ.365 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல் ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை 70 ரூபாய் அதிகரித்து ரூ.630ல் இருந்து ரூ.700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சுத்தமான ஆவின் நெய்யை வாங்கி பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திடீர் விலை உயர்வு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.