News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 போலீசாருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

 

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நாளை (15ம் தேதி) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டமும் காஞ்சீபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட உள்ளது.

 

இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 127 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 

தமிழ்நாட்டு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை, விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது.

 

அந்த வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறையில் முதல்நிலை சிறைக் காவலர் மற்றும் சிறை கண்காணிப்பாளர்கள், ஊர்காவல் படை, விரல்ரேகை பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் என மொத்தம் வழங்கப்பட உள்ளது. மேலும் ராமநாதபுரம் தீவிர குற்றப்பிரிவு பிரிவு எஸ்.ஐ.கே.நவநீத கிருஷ்ணனக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link