News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தகவல் வெளியிட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த வாரமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதேசமயம் சளி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் கொசுக்கள் நல்ல தண்ணீர்களிலேயே பெருக்கம் அடைகிறது. இதனால் பொதுமக்கள் தங்களை சுற்றி எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொண்டால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசுவின் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link